தமிழ்நாட்டு சினிமாவை நக்கும் சில புலம் பெயர்ந்த தமிழர்களின் கபட வேடம்.

இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தை காரணம் காட்டி வசதி படைத்த நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்தனர். இலங்கைத் தமிழர்கள் என்று கூட சொல்ல முடியாது, காரணம் புலம் பெயர்ந்த தமிழர்கள் எனப்படுவோரில் கிழக்குத் தமிழர்கள் என்போர் சொற்பத்தில் சொற்பமே. மலையகத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள் என்போர் எல்லாம் அடக்கப் பெறுவதுமில்லை, அவர்களை புலம் பெயர் நாடுகளில் காணக் கூட இயலாது. புலம் பெயர் நாடுகளில் பெரும்பான்மையாக இருப்போர் யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்டோரே, அவர்களோடு கணிசமான அளவு வன்னியைப் பூர்விகமாக கொண்டோரும் உள்ளனர். பலரும் தாம் வன்னி என்றழைத்துக் கொண்டாலும், அவர்களின் ஆதிமூலம் ரிஷிமூலமும் எதோ ஒரு வகையில் யாழ்ப்பாண குடாநாட்டைச் சேர்ந்தத்தாகவே காணப்படுகின்றது. 

பொதுவாக நோக்கினால் புலம் பெயர் ஈழத் தமிழர் என்போர் பெரும்பாலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோர், அதிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தோரே.

1800-களில் யாழ்ப்பாணத்தில் காலூன்றிய அமெரிக்க மிஷனரிமார் காலந்தொட்டே யாழ்ப்பாணத்தவர்கள் கல்வி வாய்ப்புக்களை அதிகம் பெற்றுள்ளனர். அத்தோடு இலங்கையில் உள்ள சமூகங்களிலேயே அதிகளவில் பார்ப்பனியமும், மனு (அ)தருமும் மேலோங்கிக் கிடப்பதும் யாழ்ப்பாணத்தவரிடையே. அதனால் தான் இன்றளவும் கூட யாழ்ப்பாணத்தவரின் தூண்டுகோலில் இயங்கும் போலி தமிழ் தேசியவாத தமிழ்நாட்டுக் கட்சிகள் பார்ப்பனர் சாதி இந்து ஆதிக்கம் மிக்க அதிமுக-வையும், இந்துத்வா கொள்கையுடைய பாஜக-வையும் போய் நக்கிக் கொண்டிருக்கின்றன. 

எம்.ஜி.ஆர் காலந்தொட்டே யாழ்ப்பாண மேட்டுக்குடிச் சமூகம் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், இடதுசாரி மற்றும் தலித் இயக்கங்களையும் வெறுத்தே வந்துள்ளன. எம்.ஜி.ஆரின் மறைவின் பின் ஏற்பட்ட வெற்றிடத்தின் போது, திமுக-வை அழித்து அங்கு ஒரு யாழ்ப்பாணம் சார்ந்த மேட்டுக்குடி அரசியல் சக்தியை உருவாக்க தொடர்ந்து நிதியுதவி நல்கியும் வந்துள்ளனர். குறிப்பாக மதிமுக வைகோ, பாமக ராமதாஸ், நெடுமாறன், பின்னாட்களில் விஜயகாந்த், சீமான் போன்றோரை உருவாக்கி வளர்வதில் பேருதவி செய்தவர்கள் புலம் பெயர் இயக்கங்களும், விடுதலைப் புலிகளும். 

இன்று புலம் பெயர் நாடுகளில் ஏமாற்றியும் நயவஞ்சகமாகவும் கள்ள மட்டை போடுவது, வங்கிகளை சுத்துவது, காப்புரிமை பிராடுகள் செய்வது என ஒரு மெகா கூட்டமும், விடுதலைப் போரின் போது பணம் சேர்ப்பதாக மக்களை மிரட்டி சேர்த்து குவித்த பணங்களையும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு நடிகை நடிகர்கள், சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், அது ஏன் தொலைக்காட்சியில் வந்தது போனது எல்லாவற்றையும் கூட்டிக் கொண்டு வந்து கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசங்களை அரங்கேற்றி வருகின்றார்கள். பல பணம் படைத்த ஈழத்தமிழ் புலம் பெயர் ஆசாமிகள் பற்பல கோஷ்டிகளை வைத்துக் கொண்டு வாரா வாரம் நடிகைகள் துணை நடிகைகள் போன்ற கோமாளிகளை அழைத்துக் கொண்டு வந்து பணத்தால் குவித்து தமது ஆஷாக்களை நிறைவேற்றியும் கொள்கின்றனர். மறு பக்கம், காசு சேர்த்து வந்த பழைய புலி இயக்கங்கள் தமக்கு காசு கிடைக்கவில்லையே என பொறுமிக் கொண்டும் இருக்கின்றனர். 

இந்த ஜாதி வெறி பிடித்தக் கூட்டங்கள் இலங்கையில் உள்ள வன்னி, மட்டக்களப்பு போன்ற பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உதவிகள் செய்வதில்லை. ஆனால் பெரிய பெரிய வாகனங்கள், புதிய புதிய வீடுகள், கியுபா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா என சுற்றுலாக்கள் என சுக போகமாய் வாழ்கின்றனர். இவற்றை எல்லாம் அனுபவித்து விட்டு தமிழ்நாட்டு கூத்தாடி கோமாளிகளையும் கூட்டி வந்து கில்மா ஆட்டங்களை எல்லாம் போட்டு விட்டு, அப்புறம் நல்ல பிள்ளைகள் போல இணையங்களில் , பத்திரிக்கைகளில் எழுதிக் கொள்வார்கள். அதாவது இங்கே எஞ்சாய் பண்ணிவிட்டு இலங்கையில் உள்ளோரிடம் நடிப்பது. 

இலங்கைத் தமிழர் தனி இனம் என்றும், தனிக் கலாச்சாரம் என்றும் பீளா விட்டுக் கொண்டு இருக்கும் இவர்கள், தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவாக பேசுவார்கள். சென்னை மூத்திர நாற்றமடிக்கும் நகரம் என்றும், தமிழ்நாட்டுக் காரர்கள் சுத்தமாக இல்லை என்றும் திட்டுவார்கள், எதோ இலங்கையில் சாதியே இல்லை என்பது போல பொய் புளுகுவார்கள், தமிழ்நாட்டில் தான் சாதி இருப்பது போல கதைப்பார்கள். விடுதலைப் புலிகள் சாதிகளை ஒழித்து விட்டார்கள் என பொய் உரைப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் ஊர்ச் சங்கங்கள் என்ற பெயரில் சாதி சங்கங்களையும், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கோவில்களையும் கட்டிக் கொண்டு வாழ்கின்றார்கள். சாதி பார்த்து தான் மணமும் முடிக்கின்றார்கள். 

இவர்கள் தனி இனம், தனிக் கலாச்சாரம், தொன்று தொட்டு இலங்கையில் தான் வாழ்கின்றார்கள் எனக் கூறுகின்றார்களே. ஏன் இவர்களுக்கு தனித்துவமான நடனம், உணவு, உடை, வாழ்க்கை முறைகள் இல்லை. தமிழ்நாட்டு நடனங்களை தான் இவர்களும் ஆடுகின்றார்கள். பரத நாட்டியத்தை தான் ஆடுகின்றார்கள். தமிழகத்து உணவான பிட்டு, இடியப்பம் போன்றவற்றையும், முஸ்லிம் உணவுகளான பரோட்டா, கொத்து ரொட்டிகளையும், மலாய்க்காரர்களின் சொதி போன்றவற்றையும், போர்த்துகேயர் உணவுகளான பாண், பணிசுகளைத் தான் தின்கின்றார்கள். சுயமான உணவு முறை ஏதுமுண்டா கிடையாது. சங்கீதங்கள் கூட தமிழ்நாட்டு பாடல்களையும், தெலுங்கு கீர்த்தனைகளையும், தமிழ்நாட்டில் எழுதப்பட்ட தேவார, திருவாசகங்களை தான் வாசிக்கின்றார்கள். இவர்களுக்கு தனித்துவமான புராணங்கள் ஏதுமுண்டா, கிடையாது ராமாயணம், மகாபாரதம், நள தமயந்தி கதை, அரிச்சந்திரா கதை என வடநாட்டு இலக்கியங்களையும், மணிமேகலை, சிலப்பதிகாரம் உட்பட தமிழ்நாட்டு கதைகளையும் தான் வைத்திருக்கின்றார்கள். குறைந்தது தொன்று தொட்டு தமிழ்நாட்டில் இருந்து விலகி இலங்கையில் வாழ்ந்து வரும் இந்த இனத்துக்கு ஒரு தனித்துவ எழுத்து முறை உண்டா. தமிழ்நாட்டில் பயன்படுத்திய எழுத்துக்கள் தான் அங்கும். இங்கு கிரந்தம் இருந்த போது அங்கும் கிரந்தம், இங்கு வட்டெழுத்து வந்த போது, அங்கும் வட்டெழுத்து, இங்கு கோல் எழுத்து வந்த போது அங்கும் கோல் எழுத்து தான் என தமிழ்நாட்டையே காப்பி செய்துள்ளார்கள். 

கிமுக்களில் தொட்டு வாழ்ந்து வரும் இனம் என கூறுவோருக்கு 13-ம் நூற்றாண்டுக்கு முந்தைய இலக்கியங்கள் ஏதும் வைத்துள்ளார்களா, கிடையாது, இலங்கைத் தமிழ் இலக்கியங்களை காட்ட சங்கப்பாடலில் வரும் ஈழத்து பூதந்தேவன் என்போருடைய  நாலைஞ்சு பாடலைக் காட்டுகின்றார்கள். அதற்கு அப்புறம் யாழ்ப்பாண சமஸ்தானம் உருவாகிய பின்னர் உருவாக்கப்பட்ட ஜோதிட, மருத்துவ நூல்களையும், ஒரு சில சமய இலக்கிய நூல்களையும் தான் காட்டுகின்றார்கள். 

அன்று தொட்டு இன்று வரை முற்றும் முழுவதுமாக தமிழ்நாட்டுச் சாயலில் அண்டிப் பிழைத்து வரும் ஒரு சிற்றினம், இன்று கடல் கடந்து சில பல வசதிகளை பெற்றதும் தமிழ்நாட்டின் மீது காறி உமிழ்கின்றார்கள். இங்குள்ள சாதி இயக்கங்களை உசுப்பி விடுகின்றார்கள். Melting Pot-ஆக இருக்கும் தமிழ்நாட்டை தமிழ் ஜாதிகள், தமிழல்லாத ஜாதிகள் என பிரித்து அடித்துக் கொள்ள வழி வகுக்கின்றார்கள். சகோதரர்களாக ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் தமிழ்நாட்டு இந்துக்களையும் அடித்துக் கொள்ள வழி சமைக்கின்றார்கள். இலங்கையில் உள்ள முஸ்லிம்களோடு இவர்களுக்கு பிணக்கு என்பதால், தமிழ்நாட்டிலும் தமிழ் முஸ்லிம்களோடு தமிழர்கள் அடித்துக் கொள்ள வேண்டுமாம். அப்புறம் இவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால், நீ தமிழனா, கிடையாது நீ மலையாளி. தெலுங்கு, கன்னடம், என கேள்வி கேட்பார்களாம். அட முட்டாப் பய முண்டங்களே. தமிழர்கள் தான் நாங்கள் கேள்வி கேட்க் கூடாதா என்றால் அதெல்லாம் தப்பட்டாம் என போங்கடிப்பார்கள். 

அப்புறம் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்களை விரட்டி விட வேண்டும் எனக் கூறிக் கொண்டே தெலுங்கு ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த வைகோ, விஜயகாந்த், போன்றோருக்கு சொம்பு தூக்குவார்கள். அப்புறம் தமிழனாகவே இருந்தாலும் திமுக-வை ஆதரித்தால் அவன் தமிழனில்லையாம், அவன் சிங்கள துரோகிகளின் கைக்கூலியாம். எம்.ஜி.ஆர் கோடி ரூபாய் தந்தார், கலைஞர் லட்ச ரூபாய் தான் தந்தார் என்பதற்காக எம்.ஜி.ஆர் காலை நக்கி பிழைத்த தமிழ் புலிகள் அன்று முதல் இன்று வரை கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டலைகின்றனர். அதற்காக எல்லா வகையிலும் அவர் மீது காறி உமிழ்கின்றனர். ஆனால் உண்மை காரணம் கலைஞர் தமிழ் புலிகளை ஆதாரிக்காமல் டொலோ போன்ற ஏனைய தமிழ் இயக்கங்களை ஆதரித்தார் என்பதும், கலைஞர் தனி ஈழத்தை ஆதரிக்காமல் சுயாட்சியை ஆதரித்தார் என்பதுமே முக்கிய காரணம். 

ஆனால் இலங்கைத் தமிழ் பிரச்சனைக்காக இரு முறை ஆட்சி கலைக்கப்பட்டும், பதவிகளை துறந்தும், முதன் முறையாக இலங்கை கலவரத்தை இனப் படுகொலை என அறிவித்து மத்திய அரசை நிர்பந்த்திது உதவியதும் கலைஞர் என்பதை எளிதாக மறந்துவிட்டனர். தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள ஏழை இலங்கைத் தமிழர்களுக்கு ரேசன் கார்டு சலுகைகள், பள்ளியில் சேர்க்கைக்கு, காப்பீட்டு உதவிகள் செய்தது அனைத்தும் கருணாநிதி தானே. 

1991-1996 வரை இலங்கைத் தமிழரை தமிழ்நாட்டில் கொடுமை செய்தும், அவர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க விடாது தடுத்தும், கொடுமை செய்த ஜெயலலிதா இன்று இவர்களுக்கு தெய்மாக தெரிகின்றார்கள். 

தமிழ்நாட்டில் தாய் மாமனை மணக்கும் முறை இருக்கு என கேவலமாக எழுதும் உங்களுக்குத் தெரியுமா. தமிழ்நாட்டில் அனைத்து சாதியில் அந்த வழக்கம் கிடையாது என்பதை. அதே போல இலங்கையில் கூட சில சாதிகளில் அந்த வழக்கம் இருந்ததை அறிவீர்களா. இலங்கைத் தமிழர்களில் பலரும் ஒரு காலத்தில் இந்தியாவின் தெற்கில் இருந்து புலம் பெயர்ந்துள்ளவர்கள் என்பதற்கான குறிப்புக்கள் உள்ளதை அறிவீர்களா. 10-ம் நூற்றாண்டில் சோழர்கள் படை எடுக்க முன்னர் இலங்கையில் தொடர்ச்சியான ஒரு தமிழ் சமூகம் இருந்துள்ளதா. 13-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் இருந்து தான் வன்னி, மட்டகளப்பு, திருகோணம்லை பகுதியில் பெரும்பகுதியான மக்கள் வேடுவர்கள் வாழ்ந்த காடுகளை அழித்து கழனியாக்கினார்கள் என்பதை அறிவீர்களா. உங்களின் ரத்தத்தில் சிங்கள மரபணுக்கள் கலந்துள்ளதை அறிவீர்களா. அந்த கேடு கெட்ட சிங்களவன் தான் ஆரியன் என பீற்றிக் கொண்டால் நீங்கள் மறுபக்கம் தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் இறக்குமதி செய்துவிட்டு தமிழ்நாட்டையே விமர்சிகின்றீர்களே.

மலையாளிகளை காறி உமிழும் நீங்கள், ஏன் மலையாளியான எம்.ஜி.ஆரை காறி துப்புவதில்லை. மலையாளிகள் அனைவரும் 12-ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழர்கள் என்பதை அறிவீர்களா. மலையாள அரசியல் வாதிகளும், நாயர், நம்பூதிரிகளையும் வைத்துக் கொண்டு, ஏனைய 75% மலையாளிகளையும் தமிழ் விரோதிகள் போல காட்டுகின்றீர்களே ஏனிந்த பொழைப்பு. அது போக, தமிழ்நாட்டில் 500 ஆண்டுக்கு முன் குடியேறி தமிழர்களாய் மாறிவிட்ட தெலுங்கர்களை காறி உமிழும் நீங்கள், அதே சமூகத்தைச் சேர்ந்த வைகோ, விஜயகாந்தின் தயவை மட்டும் எதிர்பார்ப்பது எவ்வகை நியாயம். சங்கிலி மன்னனை ஐரோப்பியர் முற்றுகையிட்ட போது, அவருக்கு உதவிய படைகள் இந்த நாயக்கர் தெலுங்கர்கள் என்பதை வாசித்ததான் உண்டா.

இன்று எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் திட்டித் தீர்த்தும், அசிங்கம் அசிங்கமாக பேசிக் கொண்டலையும் புலம் பெயர் இலங்கைத் தமிழ் கூட்டத்திடம் ஒரு கேள்வி. உங்களால் தமிழ்நாட்டு சினிமாவையும், பாடல்களையும், தொலைக்காட்சி தொடர்களையும், நடிகை நடிகர்களையும், பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும், உடைகளையும் உணவுகளையும், இத்யாதி இத்யாதி இந்தியாவில் வரும் அனைத்தையும் தவிர்த்து விட்டு வாழ முடியுமா. உங்களுக்கு என என்ன இருக்கின்றது. தனி மொழி இருக்கின்றதா. தனி வரலாறுகள் உண்டா. தனி கலாச்சாரம் இருக்கின்றதா. தனியான வாழ்க்கை முறை, சடங்குகள், எழுத்துக்கள் ஏதாவது உண்டா. கிடையாதே.  அதுவும் போகட்டும், தமிழ்நாட்டையும் இந்தியாவையும் விரோதித்துக் கொண்டு உங்களால் இயங்கத் தான் இயலுமா.. அதை பெரும்பான்மை இலங்கைத் தமிழர்கள் விரும்பத் தான் செய்வார்களா. 

இந்தியாவும், தமிழ்நாடும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்களது நாட்டில் இருந்து வரும் அனைத்தையும் தவிர்த்து விட்டு உங்களால் இயன்றால் இந்தியாவின் தயவின்றி சமூகத்தை இயக்க முடியுமா என சிந்தித்துப் பாருங்கள் தெரியும்... 

வெறும் துவேஷத்தையும், கூறு கெட்டத்தனத்தையும் பேசிக் கொண்டும், உங்களை எதிர்கேள்வி கேட்போரை சிங்களவரோடு முடுச்சிப் போட்டு கற்பனையில் வாழாமல் உங்கள் நாட்டில் பஞ்சத்தில் கிடக்கும் பட்டினியில் துவளும் உங்கள் மக்களுக்கு உதவப் பாருங்கள். உதவ வக்கில்லை என்றால் மூடிக் கொண்டு பிள்ளைக் குட்டிகளையாவது காப்பாற்றப் பாருங்கள். தனிப்பட்ட முறையில் என்னை மிரட்டுவதாலோ, அசிங்கம் அசிங்கமாக எழுதுவதாலோ, செத்து போன உங்கள் தலைவர் எழுந்து வரப் போவதுமில்லை , விடுதலைக் கிடைக்கப் போவதுமில்லை. பயனுடைய காரியங்கள் ஏதுமிருந்தால் செய்யப் பாருங்கள்.

பின் குறிப்பு: இது அனைத்து ஈழத்தமிழர்களையோ, புலம் பெயர் ஈழத்தமிழர்களையோ குறித்து எழுதவில்லை, சில புல்லுருவிகளையும் அறிவுக் கெட்ட தமிழ்நாட்டு வெறுப்பையும், இந்திய வெறுப்பையும் உமிழும் முட்டாள் முண்டங்களுக்காக எழுதியது. 

இந்து மத காவாலிகளால் ஒழிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் கதை.


இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் என்பது இரண்டாம் பட்சமான ஒன்று தான் என்பதில் ஐயமில்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேசமும், பொருளாதார வர்த்தகங்களில் அதிகளவு வளர்ச்சி கண்டு வருவதுமாக உள்ள நிலையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிந்தனை, வாழ்வியல், பொருளாதாரம் போன்றவைகளில் இந்திய சமூகங்களில் காணப்பட்ட பல இறுக்கங்கள் இளகி விட்டன எனலாம். ஆன போதும் சமூகங்களை தமது நம்பிக்கை வழியில் கட்டிப் போடுவதன் ஊடாக அரசியல் பரிபாலனங்கள் ஆற்றிவருவோருக்கு சில பல மாற்றங்களை சகித்துக் கொள்ள இயலுவதில்லை. ஆனால் இந்திய வரலாற்றை ஆழ்ந்து நோக்கினால் இந்திய சமூகம் கால காலத்துக்கு பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. ஒரு காலத்தில் பாலியல் சுதந்திரமும், சகிப்புத்தன்மையும், இனக் கலப்புக்களும் தாராளமாய் நிகழ்ந்துள்ளன. ஆனால் குப்தர்களின் அரச எழுச்சியும், அதன் பின்னர் தோற்றமான இந்து சமயம் வளர்ச்சியும், மாற்றுச் சமயங்களான பௌத்தம், சமணம், ஆசீவகம், லோகயாதம் போன்றவைகளை நசுக்கி இல்லாமல் செய்த பின்னர் ஏற்பட்ட சாதிய கட்டுமானங்களும், அதிகாரங்களை அனுபவிக்க பார்ப்பனர் உட்பட ஆதிக்கச் சாதியினருக்கு மட்டுமே உகந்தது என்ற நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியாவின் வளர்ச்சி தடைபெற்றது எனலாம்.

ஆன போதும் இத்தனை ஆயிரம் ஆண்டுகாலத்திற்கும் இல்லாத அளவுக்கு சாதி, சமய, இனம் சார்ந்த அடையாளங்களை முன்னிறுத்திய இயக்கங்கள் வளர்ச்சி கண்டது பெரும்பாலும் பிரித்தானியரின் ஆட்சிக் காலங்களில் தான். அதற்கான விதைகளை விக்டோரியா சித்தாந்த சிந்தனை வடிவத்தில் பரப்பியதோடு, சமூகத்தின் மேல் அடுக்குகளில் அதிகாரம் கோலேச்சிக் கொண்டிருந்தவர்களை அடையாள அரசியல் முனையத்திற்கு கொண்டு வந்து, அவர்களை பொருளாதார நலன் சார்ந்த சலுகைகளை வழங்குவதன் ஊடாக பிரித்தானிய முடியரசு சிக்கலின்றி இந்தியாவில் ஆட்சி செய்ய ஒரு கட்டமைப்பை ஏற்கனவே இங்கிருந்த சாதி, சமய, இனம் சார்ந்த வித்தியாசங்களின் ஊடாக முன்னெடுத்தது.

இன்று சாதி, சமய, இனம் சார்ந்த கலாச்சாரம், பாரம்பரியம் பேசுவோர் அத்தனை பேரும் இந்த பிரித்தானிய சித்தாந்ததின் வழியில் வளர்த்துவிடப் பட்டவர்கள். உலக யுத்தங்கள் இந்த சித்தாந்த வளர்ச்சிகளை துரிதப்படுத்தின. பிரித்தானியா மட்டுமின்றி உலக யுத்த காலங்களில் உலகளாவிய வகையில் அரசியல் பரிபாலனம் செய்த பல்வேறு குழுக்கள் காலனித்துவ தேசங்களில் தமது சித்தாந்தங்களை விதைத்து அதன் ஊடாக அரசியல் லாபங்களை அடைய பெரும் பிரயத்தனங்கள் செய்து வந்துள்ளன. பிரித்தானியா போன்றே ஜெர்மனியும் இந்தியாவில் தமது அரசியல் சித்தாத்தங்களை வளர்க்க அரும்பாடு பட்டது. ஜெர்மனிய ஆரிய மேலாண்மையை வழியுறுத்திய பல்வேறு தேவாலயப் பிரிவுகள் இந்து, பவுத்த, சமண மதத்தில் இருந்த ஆரிய சிந்தனைகளை தூண்டிவிட்டன. இதன் மூலம் இந்து, பவுத்த, சமண மதங்களில் இருந்த பார்ப்பனிய கருத்தாக்கங்களை வளர்த்து விட்டதோடு, அதற்கு உலகளாவிய அங்கீகாரங்களை கொடுத்தன. சமற்கிருதம், வேதங்கள் ஆகியவை இந்திய சர்வஞான வடிவங்களாக பரப்பப் பட்டது. ஆரிய மேலாண்மையை விதைக்க சர்வதேச அளவில் ஜெர்மனின் வழிநடத்தலில் தோன்றிய இயக்கங்கள் தான் பிரம்ம ஞான சபை, இலங்கையின் பவுத்த பிரம்மஞான சபை, ஆரிய சமாஜம் உட்பட்ட பல இயக்கங்கள் ஆகும். இவற்றின் வழித்தோன்றலில் தான் பிற்கால இந்து பரிவாரங்கள், இந்துத்வா இயக்கங்களும் தோற்றம் கண்டன.

இந்தியாவில் இன்று இந்துத்வா சக்திகளின் எதிர்ப்பு காரணமாக இந்து மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் விற்பனையிலிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் தளத்தில் நிலவும் இந்துத்வவாதிகளின் ஆபத்தான போக்குக்கு ஒரு உதாரணமே, பிப்ரவரி 11-இல், பெங்குவின் புக்ஸ் இந்தியா பதிப்பகம், கல்வியாளர் வென்டி டோனிகெர் (Wendy Doniger) எழுதிய The Hindus: An Alternative History நூலின் அனைத்து விற்கப்படாத நகல்களைத் திரும்ப பெறவும், அழிக்கவும் சிக்ஷா பசாவோ அந்தோலன் சமிதி (கல்வி பாதுகாப்பு இயக்க குழு - SBAS) எனும் ஒரு சிறிய இந்து அதிதீவிரவாத குழுவோடு நீதிமன்றத்திற்கு வெளியிலான ஒரு உடன்பாட்டை எட்டியது. அந்த நூல் இந்து மதத்தைத் தாக்குவதாக வாதிட்டு, SBAS அந்த நூலுக்கு எதிராக 2011-இல் ஒரு உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்துத்வா ஆதிக்கவாத அமைப்புகளும் மற்றும் கட்சிகளும், புத்தகங்கள்,திரைப்படங்கள் அல்லது இந்துவாதத்தை "அவமதிக்கும்", அல்லது மிக துல்லியமாக, அவர்களின் இந்துத்துவ வகுப்புவாத கோட்பாட்டுக்கு மற்றும் அது எதை அடிப்படையாக கொண்டிருக்கிறதோ அந்த மொத்த வரலாற்று திரித்தல்களுக்குக் குழிபறிக்கும் எதுவொன்றுக்கு எதிராகவும், சில காலமாக தணிக்கை செய்யும் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.

டோனிகெர் நூல்களுக்கு எதிரான சமீபத்திய பிரச்சாரமானது, அரசியல் மற்றும் வணிக மேற்தட்டின் சக்தி வாய்ந்த பிரிவுகள் இந்துத்வா மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடியின் பக்கம் திரும்பி இருப்பதோடு பிணைந்துள்ளது. ஒரு பரம வகுப்புவாதியான மோடி, இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில்2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளை தூண்டுவதில் சம்பந்தப்பட்டிருந்தார். அந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். அப்போது அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

அமெரிக்க எழுத்தாளரான வெண்டி டோனிகர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சமயங்களின் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பதினாறு புத்தகங்களை எழுதியுள்ள டோனிகர், சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்துக்குப் பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். இந்து மதம், தொன்மம், புராணம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு இயங்கி வருபவர்.

இந்தப் புத்தகத்தை ஏன் எழுதினேன் என்று முன்னுரையில் வெண்டி டோனிகர் குறிப்பிடுகிறார். ‘இந்திய மரபுக்கு எந்த வகையிலும் பங்களிப்பு செய்யாதவர்கள் என்று சிலர் வழிவழியாகக் கருதப்பட்டு வருகின்றனர். உதாரணத்துக்கு பெண்கள், பறையர்கள் (ஒடுக்கப்பட்ட சாதியினர், தீண்டத்தகாதோர்) ஆகியோர் ஒடுக்கப்பட்டும் அமைதியாக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால் இந்து மதத்துக்கு அவர்களுடைய பங்களிப்பு மறுக்கமுடியாதது என்பதை வெளிப்படுத்துவது என் புத்தகத்தின் நோக்கங்களில் ஒன்று’ என்கிறார் அவர்.

பென்குவின் பின்வாங்கியதால் பலம் பெற்ற SBAS, மார்ச் 1-இல்,டோனிகெரின் மற்றொரு நூலான, அலெப் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட On Hinduism என்பதையும் திரும்ப பெற கோரியது. அந்த நூலின் கருத்துக்களும், முந்தையதைப் போலவே, “புண்படுத்தும் விதத்தில் மற்றும் அவமதிக்கும் விதத்தில்" இருப்பதாக அது குற்றஞ்சாட்டியது.நூலைத் திரும்ப பெறுவதற்கு அது அழைப்பு விடுத்திருந்தது என்ற செய்திகளை மறுத்தும், “நிலைமைக்கு சரியான மறுதீர்வை" மட்டுமே அது பார்த்து வருவதாக கூறியும், அலெஃப் புத்தக நிறுவனம் பல நாட்களுக்குப் பின்னர் ஓர் அறிக்கை வெளியிட்டது.

பெங்களூரை மையமாக கொண்ட Alternative Law Forum என்பதில் ஒரு வழக்கறிஞரான லாரன்ஸ் லியான்ங், பென்குவின் The Hindus நூலைத் திரும்ப பெற்றமை மீது ஒரு சட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அலெஃப் பதிப்பகம் டோனிகெரின் புத்தகத்தை திரும்ப பெற்றது என்ற செய்திகளைக் குறித்து கூறுகையில், “அது முற்றிலும் வெட்கக்கேடானதும், கேலிக்குரியதுமாகும். ஒரு பதிப்பகம் ஒரு நூலைத் திரும்ப பெற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், நீங்கள் காவல்துறையிடம் புகார் பதிவு செய்ய வேண்டும். இந்நாட்டில் வாசிப்பிற்கு எதிர்காலம் இல்லை," என்றார்.

சூரிய கடவுளை ஒரு பாலுணர்ச்சி தூண்டுதலுக்கு உரியவராக அல்லது கற்பழிப்புக்கு உரியவராக அந்த புத்தகம் குறிப்பிடுவதை மேற்கோளிட்டு காட்டி, டோனிகெரின் The Hindus நூல் இந்து கடவுள்களை அவமதிப்பதாக அந்த இந்து பேரினவாதிகள் குற்றஞ்சாட்டினர். மேலும் கடவுள் இராமரின் மனைவியான சீதா, அவரது மைத்துனர் இலட்சுமணனுடன் சிற்றின்ப வேட்கை நிறைந்த உறவு கொண்டிருந்திருக்கலாம் என்று கூறப்படும் கருத்துக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு திருமணமான பெண் கணவனுக்கு விசுவாசமாக இருப்பதற்கு ஒரு முன்மாதிரியாகஇராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட, புராணக்கதை பாத்திரமான சீதாவை,இந்து அடிப்படைவாதத்தின் ஆதரவாளர்கள் நவீன இந்திய சமூகத்தின் நடைமுறையில் வைக்க விரும்புகின்றனர்.

மக்கள் மாட்டிறைச்சி உண்பதற்கு மகாத்மா காந்தி உடன்பட்டிருந்தார் என்பதன் மீதான டோனிகெரின் குறிப்புகளையும் SBAS மற்றும் அதை சுற்றியிருப்பவை எதிர்க்கின்றன. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இந்துத்வா சக்திகள், காந்தியைக் கடுமையாக எதிர்த்தது, ஆனால் மாட்டிறைச்சி உண்ணக் கூடாதென்ற அவர்களின் அதிகார எச்சரிக்கையைக் கடந்து செல்லும் எந்தவொரு முறையீட்டையும் அவர்கள் எதிர்க்கின்றனர். “பசு பாதுகாப்பை" அவர்கள் ஊக்குவிப்பதற்கான காரணம், மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லீம்கள் மீதான அவர்களின் நச்சார்ந்த வகுப்புவாத தாக்குதல்களில் அதுவொரு உட்கூறாக உள்ளது.

பல இந்திய ஊடக விமர்சகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புத்திஜீவிகள், SBAS மற்றும் ஏனைய இந்து அதிதீவிரவாதிகள் எந்த வகுப்புவாத தணிக்கை நெறிமுறைகளைத் திணித்து வருகின்றனரோ அதே வழியில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பென்குவின் போன்ற முன்னணி பதிப்பகங்கள் ஒதுங்கி போயுள்ளன.

பெங்குவின் பதிப்பகத்திற்கு இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ஒரு கடிதத்தில், “‘பத்வா விதிக்கபடவில்லை; புத்தகத்துக்கு தடை இல்லை; நீதிமன்ற ஆணை இல்லை. ஆனால், நீங்கள் சரிந்து விழுந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அருவருக்கத்தக்க அவமானத்தை உங்களுக்கு தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் இராப்பூச்சி போன்ற ஒரு அமைப்பிடம் சரணடைந்துள்ளீர்கள். ஏன்? ஒரு சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த  வேறு யாருக்கு இருப்பதை விடவும் அனைத்து ஆதாரங்களும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக நின்றிருந்தால் அறிவுச் சமூகத்தின் பேராதரவு உங்கள் பக்கம் மலை போல் குவிந்திருக்கும். எழுத்தாளர்களில் பெரும்பான்மையோர்  நீங்கள் அடையாளப்படுத்திய எழுத்தாளர்கள் முழுமையாக இல்லை என்றாலும் ஆதரவளித்திருப்பார்கள். உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை எங்களுக்கு விளக்க வேண்டும். உங்களை அச்சுறுத்தியது எது ? உங்கள் எழுத்தாளர்களான என்னைப் போன்றோரிடமாவது அதனைப் பகிரும் குறைந்தபட்சக் கடமை உங்களுக்கு இருக்கிறது.’

இந்துத்துவச் சக்திகளின் சகிப்புத்தன்மையற்ற செயலாகவும் இதனை அருந்ததி ராய் பார்க்கிறார். ‘தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பாசிஸ்ட்கள் தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே ஆரம்பித்து உள்ளார்கள். ஆம், இது அசிங்கமான சூழல் தான். எனினும் அவர்கள் அதிகாரத்தில் இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நீங்கள் இப்போதே மண்டியிட்டுள்ளீர்கள்.’

பார்த்தா சாட்டர்ஜி மற்றும் ரோமிலா தாபார் உட்பட முன்னணி இந்திய மற்றும் சர்வதேச கல்வியாளர்களின் ஒரு குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆன்லைன் மனு, “கருத்து சுதந்திரத்தை பெறுவதற்கு முன்பிருந்ததைப் போல பலமாக தூக்கிப்பிடிப்பதை உறுதிப்படுத்த, பென்குவின்The Hindus-க்கு எதிரான விவகாரத்தை உயர் நீதிமன்றங்களுக்கு எடுத்துக் செல்ல வேண்டுமென" வலியுறுத்தியது.

இர்ஃபான் ஹபீப், உத்சா பட்நாயக், ராமச்சந்திர குஹா, உபீந்தர் சிங் என்று பலரும் புத்தகத் தடைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர். மதவாதத்துக்கு எதிராகவும், மாற்று கருத்துகளை மறுக்கும் பாசிஸ போக்குக்கு எதிராகவும் போராடவேண்டிய அவசியத்தை இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முந்தைய பாஜக ஆட்சியின்போது கல்வித் துறை உள்ளிட்ட பல துறைகளில் இத்தகைய அத்துமீறல்கள் நிகழ்ந்ததையும் பலர் நினைவுகூர்கின்றனர். லிபரல் மனப்பான்மை கொண்டவர்களுக்கு இத்தகைய நடவடிக்கை அச்சமூட்டவே செய்யும் என்கிறார் வில்லியம் டார்லிம்பிள்.

பெங்குவினுக்கு எதிராக வழக்கு தொடுக்க SBAS-ஆல் பயன்படுத்தப்பட்ட சட்டம், வகுப்புவாத அரசியல் எந்தளவிற்கு பலமாக வேரோடியுள்ளதென்பதைக் காட்டுகிறது. SBAS-ஆல் மேற்கோளிட்டு காட்டப்படும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 295 (A) பிரிவு ,“எந்தவொரு மதத்தையோ அல்லது மத நம்பிக்கையையோ அவமதித்து,எந்தவொரு பிரிவினரின் மத உணர்வுகளை தூண்டிவிட நோக்கம் கொண்ட திட்டமிட்ட மற்றும் கொடிய நடவடிக்கைகளுக்கு,சிறைத்தண்டனை அல்லது அபராத தண்டனை, அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்," என்று குறிப்பிடுகிறது.

டோனிகெரின் நூலைத் திரும்ப பெறுவதற்கான அதன் முடிவை விவரிக்கையில், பென்குவின் கூறியதாவது, 295 (A) பிரிவை அதிகளவில் பயன்படுத்தப்படுவதானது "எந்தவொரு பதிப்பகமும், தன்னைத்தானே திட்டமிட்டு சட்டத்திற்கு வெளியே நிறுத்திக் கொள்ளாமல், கருத்து சுதந்திரத்திற்குரிய சர்வதேச தரமுறைகளைத் தூக்கி பிடித்தால் அதனை அதிகளவில் சிக்கலுக்கு உள்ளாக்கும்," என்று தெரிவித்தது.

பெங்குவின் முடிவிற்கு விடையிறுப்பாக, இந்தியாவின் பலம் பொருந்திய அவமதிப்பு சட்டத்தை விமர்சித்து டோனிகெர் ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் அவர், அந்த சட்டம் "எந்தவொரு இந்துவையும் காயப்படுத்தும் ஒரு நூலை பிரசுரித்தால், அது உரிமையியல் மீறல் என்பதை விட ஒரு குற்றமாக ஆக்குகிறது. எந்தவொரு பதிப்பகத்தின் ஸ்தூலமான பாதுகாப்பையும் ஆபத்திற்குள்ளாக்கும் ஒரு சட்டம், ஒரு நூலுக்கு எதிராக என்ன அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதைக் குறித்து கவலைப்படுவதில்லை," என்று குறிப்பிட்டார்.

வகுப்புவாதத்தைத் தடுப்பதற்கு அல்லாமல்,  295 (A) பிரிவு கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை ஜனநாயக உரிமையை ஒடுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பரந்து விரிந்த அவமதிப்பு சட்டங்கள், அரசியல் மற்றும் பெருநிறுவன ஸ்தாபகத்தின் மேலிடத்தில் உள்ள ஊழல் நடைமுறைகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக ஒரு சட்ட ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாம் எதிர்க்கவேண்டியது பெங்குயினையோ பட்ரா போன்றவர்களையோ அல்ல, இவர்களுக்கு வழிவகை செய்துகொடுக்கும் சட்டப் பிரிவைத்தான் என்கின்றனர் வேறு சிலர். பட்ராவின் மனுவில் இந்தச் சட்டப் பிரிவு ஏழு முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெண்டி டோனிகரின் புத்தகத்தைச் சிதைத்தது இந்தப் பிரிவுதான். இந்திய குடிமக்களின் மத நம்பிக்கைகளை வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்கி அவமானப்படுத்தும் எந்தவொரு படைப்பையும் இந்தப் பிரிவைக் கொண்டு தடை செய்வது சாத்தியம். சுருக்கமாகச் சொன்னால், பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் நேர் எதிரான சட்டம் என்று இதனைச் சொல்லமுடியும்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று பேதமின்றி அனைவரும் இத்தகைய சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி தங்களால் ஏற்கவியலாத படைப்புகளைத் தடை செய்து வருகின்றனர். டான் பிரவுனின் டா வின்ச்சி கோட் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானது என்று சொல்லி தடை செய்ய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை வைக்கப்பட்டது. இத்தகைய போக்கு வளர்ந்து வருவது படைப்புச்சூழலைப் பாதிக்கும். எனவே, ஒரு நவீன ஜனநாயக நாட்டுக்கு இத்தகைய கருத்துரிமைக்கு எதிரான சட்டப்பிரிவுகள் தேவையில்லை என்று பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இஸ்லாம், கிறிஸ்தவம் போல் இந்து மதம் ஒற்றைத்தன்மை கொண்டதல்ல; அது ஒரு சமுத்திரம் என்று பெருமிதத்துடன் பலர் சொல்லிவருவதைப் பார்த்திருக்கிறோம். எனில், வெண்டி டோனிகரின் பார்வை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று சொல்லி அதனைத் தடை செய்ய கோருவதன்மூலம், இந்துமதத்தின் ஒற்றைத்தன்மையை அல்லவா தடை கோருபவர்கள் முன்னிறுத்துகிறார்கள்? ஒரு புத்தகத்தை எதிர்ப்பதற்கு அதைத் தடை செய்வதல்ல வழி; மேலும் பல புத்தகங்களைக் கொண்டு வருவதுதான்.

அரை நூற்றாண்டு காலமாக இந்து மதத்தைக் கற்றுவருகிறேன். இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்கமாட்டேன் என்கிறார் வெண்டி டோனிகர். இவர் எழுதியிருக்கும் நூல்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்து மதம் பற்றியவை. காம சூத்திராவின் மொழிபெயர்ப்பும் அவற்றில் ஒன்று. எந்த இந்தியாவில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தனவோ அதே இந்தியாவில் இருந்து வெண்டி டோனிகருக்கு ஆறுதலும் குவிந்திருப்பது நம்பிக்கையூட்டுகிறது. ‘இந்தியாவில் இருந்தும் உலகின் பிற பகுதிகளில் இருந்தும் எனக்கு ஆதரவாகப் பலர் குரல் கொடுத்திருப்பது நம்பிக்கையூட்டுகிறது’ என்கிறார் வெண்டி டோனிகர். அவர் மட்டுமல்ல, கருத்துரிமையை நசுக்க முயல்பவர்களுக்கு எதிராகப் போராடும் அனைவரும் பெறவேண்டிய நம்பிக்கை இது.

இந்துத்துவ அச்சுறுத்தலை, வன்முறையை எதிர்த்து நிற்பதே இன்றைய தேவை. அப்படியொரு எதிர்ப்பு வலுவாக இருந்தால் பெங்குவின் இப்படியொரு முடிவை எடுத்திருக்காது. எனவே நமது கவனத்தை இந்துத்துவ எதிர்ப்பில் ஒருமுகப்படுத்துவோம்!

சந்தோஷ் சிவனின் "இனம்" தமிழ் தாலிபானியத்தால் புதைக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம்

இது தான் பெரியார் பிறந்த மண்ணா? பகுத்தறிவும், சுயமரியாதையும் பேராறாக ஓடிய மாநிலமா?  இங்கு இப்போது எல்லாம் கருத்துச் சுதந்திரமா? அதென்னா சுக்கா மிளகா எனக் கேட்கும் அளவுக்கு தொடர்ந்து தமிழகத்தில் திரைப்படங்கள் பல தடையாகி வருகின்றன. விஸ்வரூபத்தில் தாலிபான்களை தீவிரவாதிகளாக காட்டியதால் தடா, மெட்ராஸ் கபேவில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாய் காட்டியதால் தடா. இது இன்று தொடர் கதையாகி விட்டது. ஒரு படைப்பாளி சுதந்திரமாய் எழுதவோ, வரையவோ, புனையவோ வழி இல்லை. படங்கள் எடுத்தால் ஊர் நாட்டாண்மைகள் போலவும் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் சில கோஷ்டிகளிடம் போட்டுக் காட்டி அனுமதி வாங்கியே வெளியிட வேண்டிய துர்பாக்கிய நிலை. இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றால் என்ன எழவுக்குடா சென்சார் போர்டுகளும், சட்டங்களும் தூக்கி குப்பையில் எறியுங்கள் எல்லாவற்றையும். 

இலங்கையில் அப்பாவி தமிழர்களை ஒரு பக்கம் சிங்களவன் குண்டு போட்டு கொல்லும் போதும், மறுபக்கம் புலிகள் கேடயங்களாக்கி கொல்லக் கொடுக்கும் போதும் அமுக்கிணிகளாக பொத்திக் கிட்டு கிடந்த சொம்பு தூக்கிகள் எல்லாம் இன்று வீரவசனம் பேசுகின்றன. இலங்கைத் தமிழர்களுக்காய் இரு டஜன் பேர் தீக்குளித்தார்களே? ஏன் அதில் ஒருவன் கூட தலைவர்கள் இல்லை, பணக்காரர்கள் இல்லை. வைகோவும், சீமானும் தீக்குளித்தார்களா? டீ தான் குடித்துக் கொண்டிருத்தார்கள். எங்கும் ஏழைகள் மட்டுமே சாகப் பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் தின்னவும் பேழவும் பிறந்தவர்கள் போல. 

விஸ்வரூபம் படத்தில் என்னவோ எழவு உள்ளது போல துள்ளிக் குதித்த இஸ்லாமிய இயங்கங்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமியரையும் பிரதிநிதித்துவம் செய்ய எவன் உரிமை கொடுத்தான். அது போல ஒட்டு மொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் படங்களை தொடர்ந்து தடை செய்ய வைத்துக் கொண்டிருக்கும் இந்த பொறம்போக்கு இயக்கங்களுக்கு எவன் உரிமைக் கொடுத்தது. 7 கோடி தமிழரின் உணர்வுகளை நாடி பிடித்து பார்க்க இந்த அஞ்சுக்கும் பத்துக்கும் கட்சி தாவும் கேப்மாறிகளுக்கு எங்கிருந்து வந்தது துணிவு. 

சந்தோஷ் சிவனின் தமிழ்த் திரைப்படமான 'இனம்' இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரைக் கதைக்களமாக கொண்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்டு, மார்ச் மாதம் 28ஆம் தேதி வெள்ளிகிழமை தமிழகத்தில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே, ஒரு சில ஈழத்தமிழர் ஆதரவு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்தகைய எதிர்ப்புக்களை சமாளிக்கும் விதமாக அந்த திரைப்படம் தமிழ்த் திரைத்துறையை சேர்ந்த முன்னணி பிரமுகர்களுக்கு பிரத்தியேகமாக திரையிட்டு காட்டப்பட்டது.

அப்படியாக இந்த படத்தை பார்த்த தமிழ் திரையுலக பிரமுகர்களில் கவிஞர் வைரமுத்து, தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயாளார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா, இயக்குனர் வசந்தபாலன், இயக்குனர் சசி, இயக்குனர் எம்.ராஜேஷ், நடிகர் சித்தார்த், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

அதேசமயம், ஈழத்தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் சுட்டிக்காட்டிய காட்சிகளை அகற்றி பின்னர் இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று இயக்குனர் லிங்குசாமி அறிவித்தார். அதன்படி, 'இனம்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட, பள்ளிக்கூட காட்சி, புத்தத் துறவி தமிழ்க்குழந்தைகளுக்கு மாதுளம் பழம் கொடுக்கும் காட்சி, சிங்கள ராணுவ சிப்பாய் குழந்தையின் புகைப்படம் வைத்திருக்கும் காட்சி, தலைவர் கொல்லப்பட்டார் என்கிற ஒரு வசனம் கொண்ட காட்சி மற்றும் திரைப்படத்தின் இறுதியில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்கிற தகவல் பலகை காட்சி ஆகிய ஐந்தும் நீக்கப்பட்டுள்ளதாக லிங்குசாமி தெரிவித்திருந்தார்.

இந்த காட்சிகள் நீக்கப்பட்ட பிறகும் இந்த திரைப்படத்துக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்தன. குறிப்பாக, சில அரசியல் கட்சிகள், இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டின.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த திரைப்படத்தை மிக கடுமையாக விமர்சித்து இந்த திரைபடத்தை வெளியிட வேண்டாம் என தமிழக திரையரங்குகளிடம் கோரியிருந்தார்.

இப்படியாக 'இனம்' திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் தொடருவதை வந்ததை அடுத்து, படத்தின் வெளியிட்டாளர் இயக்குனர் லிங்குசாமி இந்த படம் மார்ச் 31ஆம் தேதி முதல் தமிழக திரையரங்குகள் அனைத்திலும் இருந்தும் முழுமையாக திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.இந்த திரைப்படம் குறித்து பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், உணர்வுபூர்வமான இலங்கை இனப் பிரச்சினையை முடிந்தவரை நடுநிலையாகச் சித்தரிக்க தான் முயன்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த இனம் திரைப்படத்திற்கு, தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட சில தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்பு வரி சலுகை ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது.அத்தோடு இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் திரைப்படத்துறைக்கான சிறப்பு தேசிய விருதுகளுக்கான திரைப்படப் பட்டியலில், தமிழ் மொழி திரைப்படங்கள் பிரிவில் இத்திரைப்படமும் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வைகோ, சீமான், ராமதாஸ், திருமாவளவன் என சாதி, இன குரோதங்களை வளர்க்கும் கேடு கெட்ட மொள்ளமாறிகளுக்கும், பார்ப்பனிய வெறி பிடித்தவர்களுக்கும், தாலிபானிய அரபு அடிமைத் தனம் பேசி வரும் மத துவேஷம் வளர்ப்போருக்கும் பெரிய வேறுபாடுகள் எல்லாம் கிடையாது. கருணாநிதி ஈழப் பிரச்சனையில் ஒன்றும் வெட்டிக் கிழிக்கவில்லை என குமுறும் இவர்கள் மட்டும் என்ன செய்து கொண்டிருந்தார்கள். இவர்களை எல்லாம் மறைமுகமாக ஏவி விட்டு, இந்திய பிரதமர் கனவில் மிதந்து வரும் அம்மணியார் தான் இந்த துவேஷிகளை எல்லாம் இணைத்து அரசியல் செய்து வரும் ஒட்டு நூல் போலும். 

இவ்வாறு சுயமரியாதைக்கும், பகுத்தறிவுக்கும் பேர் போன மாநிலம் இன்று இஸ்லாமி பாசிசத்தையும் மற்றும் தமிழ் புலி பாசிசவாத இனவெறியையும் வளர்த்து வரும் துவேஷிகளாலும், சாதி, மத குரோதங்களை வளர்ப்போராலும், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சுயநல ஊழல்வாதிகளாலும் சீரழிக்கப்பட்டு வருகின்றன என்பது தான் உண்மை. இவர்கள் பின்னாள் ஜிங்குச்சா அடிக்க ஒரு மாபெரும் கூட்டங்கள். நாசாமா போவட்டும்.. 

ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இலங்கைத் தமிழர் சார்ந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.

தமிழ் எழுச்சி என்ற போர்வையில் எழுந்துள்ள இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.

மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.

இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை வந்தேசமாக பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் வங்கதேச மக்கள் இன்றும் உண்டு.

கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது. ஏற்கெனவே, சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.

கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கை இரு நாடுகளாக பிரிவது எதார்த்த சாத்தியமற்றது என்பதை கருத்தில் கொண்டு, ஒன்று பட்ட நாட்டுக்குள் சுயாட்சியை பெற்றுத் தரும் திட்டத்தை இந்தியா கைக்கொண்டது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே. விடுதலைப் புலிகள் தவிர்த்து ஏனைய இலங்கைத் தமிழ் இயக்கங்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் அதனையே விரும்பின. இன்றும் கூட விடுதலைப் புலிகளுக்கு பின்னரான சூழ்நிலையிலும் அதனையே கூறி வருகின்றன. திம்பு ஒப்பந்தத்தில் கூட அனைத்து தமிழ் இயக்கங்களும் இதனையே வழிமொழிந்தன.

ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.

இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் எவ்வாறுசில பார்ப்பனிய ஊடகங்கள் நரித்தனமாக இலங்கை அரசுக்கு சார்பாய் எழுதுகின்றனவோ, அதே போன்று தமிழ் தேசியம் என்ற போர்வையில் முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் ஒட்டு மொத்த அழிவுக்கும் இந்திய அரசு ஒன்று மட்டுமே காரணம் என்ற தோரணையில் எழுதப்பட்டும் பிரச்சாரப்படுத்தப்பட்டும் வருகின்றன. முதலாவதாக கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் வடக்கை விட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இலங்கை அரசு அவர்களை இனப்படுகொலை ஒன்றும் செய்யவில்லை. இலங்கை அரசை பொறுத்தவரை இலங்கைத் தீவை ஒன்றாக வைத்திருக்க வேண்டும், அதனையும் பௌத்த நாடாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றது.

இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது. அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும். தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் வரை ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும், எந்த வகையிலும் தீவிரவாதம் ஒரு தீர்வாகாது.

கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் இலங்கையில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%)  அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள்.  இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். ஆரம்பத்தில் சிங்களவர்களோடு ஒன்றிணைந்து வாழ்வோம் என ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை அடகு வைத்தவர்களும் யாழ்ப்பாணத் தமிழ் தலைவர்கள் தான்.

ஆனால் இலங்கையின் விடுதலைக்குப் பின்னர் இந்த நிலை மாறத் தொடங்கியது. அனைவரும் தமிழர்கள் என்ற எண்ணம் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் காணப்படவில்லை, முதலில் சிங்களவருக்கும் - முஸ்லிம் மற்றும் இந்திய வியாபாரிகளுக்கும் 1915-யில் கலவரம் ஏற்பட்ட போது, சிங்கள தலைவர்களை யாழ்ப்பாணத் தமிழர்களே காப்பாற்றினார்கள். பின்னர் இந்திய வம்சாவளி தமிழர்களின் குடியுரிமை 1948-யில் பறிக்கப்பட்ட போது , ஒன்றிணைந்து அவர்களை நாடு கடத்தியவர்கள் யாழ்ப்பாணத் தமிழ் தலைவர்கள் தான். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் சிங்கள பேரினவாதம் யாழ்ப்பாணத் தமிழர்கள் மீது கைவைக்கத் தொடங்கிய பின்னரே, யாழ்ப்பாணத் தமிழ் தலைவர்கள் ஒன்று கூடி 1977-யில் தேர்தலைச் சந்தித்து வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற பெயரில் தனி தமிழ் நாடு ஒன்றை இலங்கையில் கோரினார்கள். ஆனால் அந்த தேர்தலில் வடக்கு இலங்கையில் உள்ள தமிழர்கள் மட்டுமே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு முழுமையாக வாக்களித்தனர். கிழக்கிலோ, மலையகத்திலோ தமிழ் கட்சிகளால் வெற்றி பெற இயலவில்லை. மொத்தம் அவர்கள் பெற்ற வாக்கின் சதவீதம் 6.2 % மட்டுமே. இது இலங்கைத் தமிழர்களின் 12 % தொகையிலும் சரி பாதியே ஆகும்.

இந்த நிலையில் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்று 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய  நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். தொடர்ந்து விடுதலைப் புலிகள் சக பிற தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தோரையும் படுகொலை செய்யத் தொடங்கியது. இது தமிழ் தரப்பை பலவீனப்படுத்தியதுடன், சிங்கள தரப்பை பலமடையச் செய்தது எனலாம். திம்பு ஒப்பந்தத்தின் ஊடாக தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கும் வாய்ப்பிருந்தும், விடுதலைப் புலிகள் பின் வாங்கி கொண்டதோடு சிங்கள அரசுடன் இணைந்து இந்திய ராணுவ வருகையை எதிர்த்தது. சிங்கள அரசின் துணையோடு பிற தமிழ் இயக்கங்களை கொன்றும் விரட்டியும், இந்திய ராணுவத்தையும் வெளியேற்றியது. மீண்டும் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் இலங்கை சிங்கள அரசையே பலப்படுத்தியது என்பதே வரலாறு கூறும் உண்மையாகும்.

1990-களில் வடக்கில் வாழ்ந்த தமிழ் இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.

இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ட்ராவ்லர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழக மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள், மற்றும் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் வளத்தை சுரண்டத் தூண்டிவிடப் படும் மீன் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் இந்திய அரசியல் வாதிகளின் பேராசை என பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன, வெறும் சிக்கல்களுக்கு கச்சதீவும், இலங்கை ராணுவமும் மட்டும் காரணமில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும். சொல்லப் போனால் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை வடக்கு இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழ் மீனவர்களே விரும்பவில்லை. மணிசங்கர் ஐயர் போன்ற பல்வேறு தரப்பட்ட இந்திய அரசியல்வாதிகள் கடல் தொழிலில் ஈடுபட்டும், கடல் வளத்தை முற்றாக சுரண்டியும் வருவது குறித்து யாரும் பேசுவதே இல்லை.

தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.

இன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் இலங்கைத் தமிழர் விடயம் என்பது தமது அரசியல் போதைக்கான ஊறுகாயாக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விடுதலைப் புலிகளை மகாத்மாக்களாக சித்தரித்தும், இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியும், தமிழர்கள் கொல்லப்பட்டதுக்கு முழுக்க முழுக்க இந்தியா தான் காரணம் எனவும், கூடவே ஆரிய திராவிட யுத்தம் என்றும், இலங்கையின் சிங்கள பவுத்தர்கள் அனைவரும் ரத்த வெறி பிடித்த அரக்கர்கள் போல சித்தரிக்கப்பட்டும், தமிழகத்தில் உள்ள தமிழர்கள் தமிழ் வெறி பிடித்து தமக்கு வாக்களித்தால் மட்டுமே இனி தமிழினம் தலைநிமிரும் என்பது போலவும் மாயத் தோற்றத்தை வைக்கோ, ராமதாஸ், சீமான் உட்பட பலரும் எழுப்பி வருகின்றனர். அதற்கு தோதாக மதவாத பார்ப்பனியக் கட்சிகளான பாஜக, அதிமுக போன்றவைகளை ஈழ நலனின் அக்கறையுள்ள கட்சிகள் போலவும், கூடவே பைச பிரயோஜனம் இல்லாமல் தமது சொந்த சொத்துக்களை பாதுக்காக்க கட்சி நடத்தும் விஜயகாந்த் போன்றோரையும் இழுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஈழ நலனின் முழு விரோதங்களையும், பசப்புக்களையும் ஆற்றி வரும் சுப்பிரமணிய சுவாமி, சோ உட்பட அனைவரும் இந்த ஈழக் காப்பாளர்கள் அணி சேர்ந்துள்ள அணியில் தான் உள்ளனர் என்பது மறைக்கப்படும் உண்மைகள்.

இவ்வாறான அரசியல் ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருப்போர் அவ்வவ்போது எதாவது ஒரு ஈழம் சம்பந்தப்பட்ட படங்களை தடை செய்ய வைப்பதில் மும்முரம் காட்டி ஈழ ரட்சகர்கள் என்பதான பிம்பத்தையும் ஏற்படுத்துகின்றனர். சில சமயம் இத்தகைய படங்களை இவர்களே தயாரித்துவிட்டு இவர்களே தடையும் செய்ய வைக்கின்றார்களோ என்ற எண்ணமும் கூட எழுகின்றது.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு கடைசி வரை சென்னையிலோ, குமரியிலோ ஏன் வன்னியிலோ, மலையகத்திலோ ஏழைத் தமிழன் அரை வயிறுக் கஞ்சிக்கு மட்டும் சிங்கியடித்துக் கொண்டிருக்கின்றான், என்றாவது ஒரு நாள் நம் வாழ்வு மாறாதா என்ற விடியாக் கனவுகளோடு.


தெலுங்கு சோழர்களும் ஆரிய சோழர்களும் பீதியைக் கிளப்பும் தமிழ் அலவலாதிகளும்.


வரலாறு என்றால் என்ன? வரலாறு என்பது சம்பவங்களின் தொகுப்புத் தான். இதில் சாமான்யர்களுக்கோ, அன்றாடங்காட்சிகளுக்கோ இடமில்லை. முற்காலத்தில் நடைபெற்ற அரசியல் சம்பவங்களை தொகுத்துக் கூறுவதே வரலாறு. பெரும்பாலான வரலாறுகள் அந்தக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள், உட்பட ஆதிக்க சமூகத்தில் நிலைப் பெற்ற பெருந்தலைகளின் புகழைப் பாடுவது மட்டுந்தான். அந்த வகையில் தமிழக வரலாறும் ஒன்றும் விதி விலக்கல்ல. தமிழக வரலாறு பல சிக்கல்களையும் குழப்பங்களையும் உடையது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஐரோப்பியர்களை போல வரலாற்றை எழுதி ஆவணப் படுத்தும் முறைகள் இங்கிருந்திருக்க வில்லை. அதனால் தான் என்னவோ பழம் வரலாறுகள் பெரும்பாலும் குழப்பங்கள் நிறைந்தத்தாகவே காணப்படுகின்றது. அதனால் தான் இன்று பல சாதி, சமய மக்களும் எதாவது ஒரு மன்னர்களின் வழித் தோன்றல்கள் என கதை யளந்து அரசியல் செய்து வருகின்றனர். உண்மையில் நம் யாவரின் மூதாதையர்களும் இந்த மன்னர்கள் ஆண்ட காலத்தில் நிலைத்தை உழுது கொண்டோ, எதாவது ஒரு தொழில் செய்து கொண்டோ அடிமைகளைப் போலத் தான் இருந்திருப்பார்கள் என்பதை நாம் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. ஆண்டான் அடிமைகளின் வழிக் கொழுந்துகள் தான் இன்று ஆண்டான் வழித் தோன்றல்கள் என நிறுவுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

அது நிற்க, தமிழக வரலாற்றில் மதம் முக்கியப் பங்காற்றி இருக்கின்றன. குறிப்பாக ஒரு பக்கம் நாத்திக மதங்களான பவுத்தமும், சமணமும் சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, கல்வி வளர்ச்சி என செயல்பட மறுபக்கம் ஆத்திக வைதிக மதங்களான சைவமும், வைணவமும் சாதிகளை வளர்த்தல், கல்வி வளர்ச்சியை தடுத்தல், குலத் தொழில் முறையை ஊக்குவித்தல், பெண் விடுதலையை அழித்தல் என செயல்பட்டன. இறுதியில் வென்றது என்னவோ மூடத்தனங்களும், முட்டாள் தனங்களும் தான். அதனால் தான் என்னவோ இந்தியா இன்னும் சிக்கல் பிடுங்கல் உள்ள தேசமாகவே இருக்கின்றது. அது நிற்க.

வரலாற்றை ஆராயும் போது இரண்டு விதமாக ஆராயலாம். ஒன்று ஏற்கனவே நாம் நினைத்து வைத்திருப்பவைகளை சரி என நிறுவ முயல்வது. இரண்டு நமது மூளையில் சமூகத்தால், குடும்பத்தால் பதிய வைக்கப்பட்ட Pre-conceived Ideas என்பவைகளை அழித்து விட்டு, புதிதாக தேடல்களை மேற்கொள்வது. இவ்விரண்டில் எது சரி பிழை என வாதிட விரும்பவில்லை. ஆனால், ஏற்கனவே பதிய வைக்கப்பட்டுள்ள சங்கதிகளை கொண்ட ஒரு வட்டத்தை தாண்டி சிந்திக்க இயலாது, அவ்வாறு போக விழைந்தாலும் நமது கர்வம் நம்மை தடுத்துவிடும். ஒருக் கட்டத்தின் பின் கலவரமாகி விடுவோம்.

இன்று தமிழ் இனம் சார் அரசியலை முன்னெடுக்கும் போலி தமிழ் தேசியவாதிகள் பலரும் எதாவது ஒருக் கட்டத்தில் தங்களின் சாதியபிமான, மதாபிமானங்களை அரசியல் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்களுக்கு வரலாறுகள் என்பது அரசியல் போதையில் ஊறுகாய்கள் போன்றவை. அதுவும் தமிழக வரலாற்றில் காணப்படும் வெற்றிடங்களை தமது சாதி, மத வளர்ச்சிக்காக நிரப்பிக் கொள்வதில் வல்லவர்களாக உள்ளனர். 

தேசியம், இறையாண்மை, இன அடையாளங்கள் என்பவை எல்லாம் எப்போது தோன்றின எனப் பார்த்தாலே, இன்று இவற்றின் முதுகுகளில் ஏறிக் கொண்டு அரசியல் சவாரிகள் செய்வோரின் முகத்திரைகள் கிழிந்து விடும். 18-ம் நூற்றாண்டின் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னரே தேசியம் சார்ந்த அடையாளங்களும், இனம் சார்ந்த அடையாளங்களும் தோற்றம் பெற்றன. தேசியவாதம் என்ற பதத்தையே யோகான் காட்பிரைட் ஏற்டர் போன்ற ஐரோப்பிய சிந்தனாவாதிகளால் வழிமொழியப் பட்டன. பிரஞ்சு புரட்சியின் பின் ஏற்பட்ட ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களின் கலக்கத்தின் பின்னரே தனித் தனி தேசியம் சார் உணர்வை மக்களுக்கு ஊட்டுவது சிறந்தது, அல்லது மக்கள் வர்க்கம் சார்ந்து ஒற்றுமைப் பட்டுவிடுவார்கள் என எண்ணினார்கள். தேசியவாதங்களை கட்டமைக்கும் போது வெறும் நாடும், கொடியும் போதாதே. அதனால் மக்களைச் சுரண்டும் மதங்களையும், மக்களின் மொழிகளையும் தேசியவாத அடையாளத்துக்குள் கொண்டு வந்தார்கள். இதன் விளைவுகளே 20-ம் நூற்றாண்டில் கோடிக் கணக்கான உயிர்களை காவு வாங்கிய இரு உலகப் போருக்கு வழி வகுத்தன என்பது தனிக் கதை. 

இந்திய விடுதலையின் பின் மொழி சார் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழி சார் மாநிலங்கள் நிர்வாக வசதிகளுக்காக மட்டுமே என்ற எண்ணத்தை தாண்டி மொழி சார் தேசியங்களை வளர்க்க வித்திட்டன. மொழிக்கு ஒரு மாநிலம் என்ற இந்தியாவை பிரிக்காமல், மாநிலத்துக்கு ஒரு மொழி என மாநிலங்களை பிரிக்குமாறு மிகுந்த தூர நோக்கு பார்வையோடு அண்ணல் அம்பேத்கார் அன்றே எடுத்துரைத்தார். ஆனால் நடந்தது என்னவோ தலைகீழ். தமிழகத்துக்கு வருவோம், இன்று தமிழக அரசியலை முன்னெடுக்கும் பல சாதி, மதக் கட்சிகளும் தமது பழம் பெருமைகளை பீற்றிக் கொள்ள என்றோ இங்கு நாடாண்டு போர்களையும், திக் விஜயங்களையும், அடிமை வியாபாரங்களையும், சாதிகளையும், பாலியல் வன்முறைகளையும் வித்திட்ட பேரரசுகள் தொட்டு குட்டி ஜமீன்கள் வரையிலானவர்களின் வழித் தோன்றல்கள் என கூறி வருகின்றன.

அதிலும் திக் விஜயங்களுக்கும், உயிர்க் கொலைகளுக்கும் புகழ் பெற்ற பிற்காலச் சோழர்களை தலையில் வைத்துக் கொண்டாடுவதன் மூலம் அரசியல் செய்யும் ஈனர்கள் பலர் இருக்கத் தான் செய்கின்றனர். ஆனால் என்ன சோழர்கள் தமிழர்கள் மட்டுமில்லை, அவர்கள் மொழி கடந்த ஒரு ஆளும் வர்க்கம் என்று எடுத்துச் சொன்னால் கலவரமாகி விடுகின்றார்கள். சோழர்கள் மட்டும் ஏன் இந்த அபிமானம். ஒன்றுமில்லை சோழர்கள் அக்காலத்தில் பல அண்டை அயல தேசங்கள் மீது படை எடுத்து ஆளுமை செலுத்தியவர்கள், மிகப் பெரிய கோவில்களையும், கலை வடிவங்களையும் கட்டி எழுப்பியவர்கள். இத்தகைய ஆளுமையைச் சேர்ந்தவர் தாம் என சொல்வதன் மூலம், தாமும் எதோ ஒரு வகையில் ஆதிக்க ஆளுமைச் செலுத்துவோன் என்ற கற்பிதக் கனவுகளே. ஆனால் உண்மையில் சோழர்களின் வழித்தோன்றல்களாக இருக்கும் ஜமீன்கள் பலவும் இன்று எவ்வித சலனமும் இன்றி தாமு உண்டு தம் சோழி உண்டு என வாழ்கின்றார்கள். உதாரணத்துக்கு பிச்சாவரம் ஜமீன் குடும்பத்தவர்களைச் சொல்லலாம்.

வாழையடி வாழையாக பதிவுலகில் சிலர் கிளம்பிக் கொண்டே இருப்பதும், நாமும் பதில் சொல்லிக் கொண்டே இருப்பதும் தலையாய பணியாப் போச்சு. தமிழ், தமிழ் எனக் கூறிக் கொண்டு தம் பிள்ளைகளை மட்டும் கான்வண்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் தங்கத் தமிழர்கள் முதல். தனி நாடு வேண்டும், தமிழ் தான் வேண்டும் என்றுக் கூச்சலிட்டுக் கொண்டே ஏஜென்சி மூலமாக ஐரோப்பாவுக்கு, அமெரிக்காவுக்கு போய்க் கொண்டிருக்கும் ஓலத் தமிழர்கள் வரை. தமிழ் என்ற அடையாளம் பிழைப்புக்கானது என்பதை மட்டும் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

சொன்னால் புரியப் போவதுமில்லை என்ற போதும் நமக்கு தெரிந்தவைகளை சொல்லி வைப்பது நல்லது தானே. இல்லை என்றால் நமது தலைமுறைகள் நம் மீது காறித் துப்பும் அல்லவா. ஏன் தமிழ்வாதம் பேசும் கட்சிகள் ஆகட்டும், தமிழ் வெறித்தனங்கள் ஊட்டும் இயக்கங்கள் ஆகட்டும், சாதி சங்கங்கள் ஆகட்டும் சோழர்களை மட்டும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றார்கள். எதாவது ஒரு சாக்கு போக்கு நூல் நுழையும் இடம் இருந்தால் கூட அதனை நிரப்பி சோழர்கள் வம்சாவளி என பீற்றிக் கொள்கின்றார்கள். காரணம் சோழர்கள் கீர்த்தி மிகப் பெரியது. எண்ணற்ற போர்களை நடத்தி நாடாண்டவர்கள், கோவில்களை கட்டி எழுப்பி புகழ் தேடியவர்கள், கோவில்களில் தாசிகளையும், போர்களில் கொள்ளைகளையும் அடித்து கொட்டம் போட்டவர்கள். 

சோழர்கள் தமிழர்களா? 

எந்தளவுக்குத் தமிழர்கள் என்ற கேள்வி தான் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. மொழி அடிப்படையில் பார்த்தால் சோழர்களில் ஒரு பிரிவினர் தமிழர்களாகவும், மறு பிரிவினர் தெலுங்கர்களாகவும் இருந்துள்ளனர். அல்லது தமிழ் மரபணுக்களைத் தான் தேடுவேன் என கங்கணம் கட்டுவோரின் பிரகாரம் பார்த்தால் சோழர்களின் ஆதி மூலம் வட மேற்கு இந்தியாவில் இருந்து வந்தததாகவே பலரும் கருதுகின்றனர். சோழர்கள் பற்றிய குறிப்பு அசோகனது கல்வெட்டுகளில் இருந்தே காணப்படுகின்றன. சோழர்கள் பற்றி அறிய முற்படுவோர் சங்க இலக்கியங்கள், இந்திய புராணங்கள், இலங்கையின் மகாவம்ச நூல், தொலமி உட்பட வெளிநாட்டுப் பயணர் குறிப்புக்கள், பல்வேறு கல்வெட்டுக்கள், சோழ மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகள், சோழர்கள் குறித்து ஆராயப்பட்டு எழுதப்பட்ட ஐரோப்பிய மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள விரிவான நூல்கள் துணைக் கொண்டே அறிய இயலும்.

சோழர்கள் காவிரி நதி பாயும் இன்றைய தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளடங்கலான சோழமண்டலத்தையே ஆட்சி செய்து வந்துள்ளனர். கிழக்கே கடல், தெற்கே புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் தென் வெள்ளாறு, மேற்கே கோட்டைக்கரை (மதிள்கரை - மதுக்கரை), வடக்கே கடலூர் மாவட்டத்தில் இருக்கும் வடவெள்ளாறு ஆகியவை சோழநாட்டு எல்லை என கம்பர் பாடிய சோழமண்டல சதகம். 10-ம் பாடல் கூறுகின்றது. இதனை பிற்காலத்திய கிருஷண்தேவராயனின் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சேந்தமங்கலம் கல்வெட்டும் உறுதி செய்கின்றது.

செம்பியன் என்ற சிபி மன்னன்

அது போக இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் சோழர்களின் முன்னோராக சிபிச் சக்கரவர்த்தியை கூறுகின்றனர். சிபிச் சக்கரவர்த்தி வட நாட்டில் வாழ்ந்த அரசனாக மகாபாரதம், பௌத்த ஜாதக கதைகள், சீனக் கதைகளிலும் இடம் பெற்றுள்ளது. சிபி மன்னன் இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதியை ஆண்டு வந்தவன். இன்று கூட சிபி என்ற ஊர் அங்குள்ளது. சீன பயணி பாசியான் இந்தக் கதையை பதிவு செய்துள்ளார். புறா ஒன்றைக் காக்க தன் தசையை வெட்டிக் கொடுத்த உத்தமன் என்று புகழுரைக்கின்றது. ஏன் இவன் வழி வந்தவர்களாக புறநானூறு சோழர்களை பதிவு செய்ய வேண்டும். 

இதனை புறநானூரு மட்டுமில்லை வடமொழி நூல்கள் எழுதிய தண்டின், வராகமிகிரர் ஆகியோரும் சோழர்கள் சிபி வம்சாவளி என்றே கூறுகின்றனர். அதே போல திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டும் சோழர்கள் தம்மை வடநாட்டோடு தொடர்பு படுத்திக் கூறியுள்ளார்கள். 

இவற்றை எல்லாம் உண்மை என ஏற்பதும், ஏற்காததும் வரலாற்று ஆசிரியர்களின் விருப்பம். ஆனால் எல்லா மன்னர்களை விடவும் சோழர்கள் அதிகளவு பிறமொழி , பிறக் கலாச்சார கலப்புடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். அத்தோடு இவர்கள் உண்மையில் ஒரு தமிழ் குடி வந்த மன்னர்கள் தானா என்ற ஐயமும் பலரால் எழுப்பப் படுகின்றது.

ஜடா சோழனின் மகன் கரிகாலச் சோழன்

முனைவர் யசோதா தேவி அவர்கள் தமது நூலான " The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D " என்பதில் தெலுங்குச் சோழர்களால் வெளியிடப்பட்ட பொப்பூதி கல்வெட்டுக் குறிப்பு ஒன்றைத் தருகின்றார். அந்த குறிப்பின் பிரகாரம் கங்கை நதிப் புறத்தில் அமைந்துள்ள அயோத்தியா தேசத்தை ஆட்சி செய்த ஜடா சோழன் என்பவன் தெற்கு நோக்கி படை எடுத்து வந்து, திரவிள பாஞ்சகத்தையும் ( ஐந்து தமிழ் நாடுகள் ) காவிரிக் கரையில் ஆட்சி செய்த உறையூர் மன்னனை வீழ்த்தி தஞ்சை தரணியையும் கைப்பற்றிக் கொண்டான் எனவும். இவனது புதல்வனே முதலாம் கரிகாலச் சோழன் என கோணித்தேயா குறிப்புக்களும், தெலுங்கு கவி திக்கணாவின் பாடல்களும் கூறுகின்றன. இந்த கரிகாலனின் வழி வந்தோரை கரிகாலகுலவம்சம் எனவும் அழைக்கின்றனர்.

முதலாம் கரிக்காலச் சோழனின் வழி வந்த மகிமானச் சோழன் என்ற பேரன் இருந்ததாகவும், அவன் இரண்டாம் கரிகாலச் சோழன் என்றழைக்கப்பட்டான். அவனே காவிரி நதிக்கரையில் கல்லணைக் கட்டியவன் எனவும், காடுகளை அழித்து கழனியாக்கியவன் எனவும் கூறுகின்றது. இரண்டாம் கரிக்காலச் சோழனுக்கு இரு சகோதரர்கள் இருந்துள்ளனர். அவர்கள் தசாவர்மன், தொண்டமானன்.  தசாவர்மன் பகராஷ்ட்ராவை கைப்பற்றி பொத்தாப்பி நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். தொண்டமானன் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவ்வாறு Buddhist Remains in Andhra and the History of Andhra Between 225 and 610 A.D என்ற நூலில் K. R. சுப்பிரமணியன் கூறுகின்றார். வேலூர் பாளைய செப்பேடுகளைக் கொண்டு பல்லவர்களின் தமிழக படை எடுப்பை ஆராய்ந்த போது இரண்டாம் கரிகாலச் சோழனின் காலமானது, காஞ்சியை கைப்பற்றிய பல்லவ மன்னன் குமாரவிஷ்ணுவின் காலத்துக்கு ( கிபி 325 - 350 ) முந்தையதாக இருக்க வேண்டும் என கருதப்படுகின்றது.

இந்த மகிமானச் சோழனின் புதல்வர்கள் தான் தொண்டமானன், தசாவர்மன். தொண்டை நாட்டை தொண்டமானன் என்பவனும், அதற்கு மேல் இருந்த மொழி பெயர் தேயம் என்றழைக்கப்படும் இன்றைய ராயல்சீமா பகுதிகளை தசாவர்மனுன் ஆண்டனர். ராயல்சீமாவை ஆண்ட ரேணாட்டுச் சோழர்கள் இந்த கரிகால குலவம்சம் வழியில் தோன்றிய தசாவர்மனின் வம்சம் என அறியப்பட்டனர். ஆந்திராவை ஆண்ட கோணித்தேனா சோழகர்கள் தசாவர்மனின் வழித்தோன்றல்கள் என அறிவிக்கின்றார்கள். இந்த தசாவர்மனே ரேணாட்டுச் சோழ அரசை நிறுவினான் எனவும், இவன் கரிகால குலவம்சம் என அறிவித்தும் இருந்தான்.

ஆனால் கரிகாலன் எப்போது ஆண்டான் என்ற குறிப்பு ஏதுமில்லை. சிலர் கிபி இரண்டாம் நூற்றாண்டவன் என்பதை ஏற்கின்றனர். ஆனால் தமிழக குறிப்புக்களை பார்த்தோமானால் இந்த கரிகாலச் சோழனே உறையூர் உட்பட தஞ்சையில் ஆண்ட குறும்ப பழங்குடிகளை விரட்டி விட்டு, காடுகளை கைப்பற்றி கழனியாக்கி சோழ நாட்டை நிறுவியவன். ஜடா சோழனின் குறிப்புக்களும் அயோத்தியில் இருந்து வந்து உறையூர் அரசனை கைப்பற்றினான் என்று கூறுவது இங்கு பொருந்தத் தக்கது..

கயவாகு காலம்காட்டி

கயவாகு காலம்காட்டி என்பது வி. கனகசபைப் பிள்ளை என்னும் வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் எடுத்த போது சிங்கள மன்னன் கஜபாகு என்பவரும் வந்திருந்தார் என கூறுகின்றது. மகாவம்சம் நூல் இந்த கஜபாகு மன்னனின் காலப் பகுதியை கிபி 113 - 134 எனக் கூறுகின்றது.

“சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என கூறப்படுகிறது. தமிழ் மன்னர்களின் இமயத்தை நோக்கிய பயணத்தை அவர்களது பயணத்திற்கு சாதகமான சூழ்நிலை, அதாவது எதிர்ப்புகள் குறைந்த வலிமையற்ற வடநாட்டு மன்னர்களின் காலமாக இருக்கக்கூடும் என்ற ஆராய்ந்த அறிஞர்களில் ஆராவமுதன் என்பவரின்  ஆராய்ச்சி முடிவைக் கொண்டு கரிகாலன் இமயம் சென்றது கி.மு. 44 – கி. மு. 17 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடும் எனவும் திரு. ராசமாணிக்கனார் கருதுகிறார்.

ஆக அனைத்துக் குறிப்புக்களையும் கொண்டு பார்க்கும் போது முதலாம் கரிகாலனின் தந்தையாக அறியப்படும் ஜடா சோழன் என்பவன் அயோத்தியில் இருந்து வந்து சோழவள நாட்டை குறும்பர்களிடம் இருந்து கிமு -விலேயே வந்து கைப்பற்றி சோழ நாட்டை அமைத்துள்ளான் என்பது தெரிகின்றது.

முசுகுந்த சோழன்

காவிரிக் கரையில் பூம்புகார் நகரத்தை நாகர்கள் ஆட்சி செய்து வந்ததாகவும், முசுகுந்த சோழன் என்ற மன்னன் வடக்கில் இருந்து வந்து காவிரிக் கரைகளில் இருந்த நாகர்களை விரட்டி விட்டு புகார் நகரை கைப்பற்றியதாக மணிமேகலை நூல் கூறுகின்றது. இந்திரனின் துணை கொண்டு நாகர்களிடம் இருந்து புகாரை கைப்பற்றிக் கொண்டதால் தான் இந்திரனை சிறப்பிக்கும் இந்திர விழாவை சோழர்கள் தொடர்ந்து எடுத்து வந்துள்ளனர் என்பதை சிலப்பதிகார குறிப்புக்கள் ஊடாக அறிய இயலுகின்றது. இதன் ஊடாக முசுகுந்த சோழன் ஒரு அயலவன் எனவும் காவிரிக்கரையில் அமைந்திருந்த நாகநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.

அமராவதியில் இருந்த அசுரர்களை அழிப்பதில் இந்த முசுகுந்த சோழன் இந்திரனுக்கு உதவியதாகவும் அதற்கு மறு உபகாரமாகத் தான் இந்திரன் முசுகுந்த சோழன் தெற்கின் நாகநாட்டைக் கைப்பற்ற உதவியதாகவும் எனவும் The Origin of Saivism and Its History in the Tamil Land என்ற நூலில் கே. ஆர். சுப்ரமணியன் கூறுகின்றார். புகார் நாகர்களால் ஆளப்பட்டமையால் நகரம் என்றழைக்கப்பட்டதாகவும், அந்த புகார் நகரத்தைப் பூர்விகமாக கொண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் பின்னர் அவ்விடம் நீங்கி பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட சிவகங்கைச் சீமைக்கும் இடம் பெயர்ந்ததாகவும் அறியப்படுகின்றது. இன்றளவும் இந்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் நகரத்தார்கள் என அழைக்கப்படுகின்றது இவர்கள் சோழருக்கு முந்தைய நாகர்களின் வழி வந்தோராகவும் அறியப்படுகின்றது.

இக்சாவாகு அரசர்கள் ஆட்சி செய்த ஆந்திராவின் பல்நாடு பகுதிகளில் முசுகுந்த சோழன் பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுவதும். முசுகுந்த சோழன் தம்மை இக்சவாகு வழித்தோன்றலாக அறியப்படுவதும். முசுகுந்த சோழன் தோற்றுவித்த முசிறி நகரம் இன்றளவும் திருச்சிராபள்ளி மாவட்டத்தில் காணப்படுகின்றது. முசுகுந்தன் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. அத்தோடு சோழ மண்டலத்தில் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய கோவில்களை கட்டினான் என இன்றளவும் அந்த கோவில் தலபுராணங்கள் கூறுகின்றன. இந்த முசுகுந்தனின் காலப் பகுதியை கிமு 3-ம் நூற்றாண்டு எனக் கூறுவாரும் உளர்.

இந்த குறிப்புக்கள் அனைத்தும் ஊடாக வடக்கில் இருந்து வந்த ஜடா சோழன் உறையூரில் இருந்த குறும்பரை விரட்டியதும், வடக்கில் இருந்து வந்த முசுகுந்த சோழன் புகார் நகரில் இருந்த நாகர்களை விரட்டியதும் அறியப்படுகின்றது. இதன் மூலம் ஜடா சோழன், முசுகுந்த சோழன் ஆகிய இருவரும் ஒருவரோ என்ற ஐயமும் எழுகின்றது. அதே போல குறும்பர்கள், நாகர்கள் தஞ்சைப் பகுதியில் வாழ்ந்திருந்த பழங்குடி இனமாக கருதுவதற்கும் இடம் உண்டு. சோழர்களும் நாகர்களும் இனக்கலப்படைந்ததைக் கூறும் கதைகள் சில சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நாகர்களோடு சோழர்கள் கலப்படைந்து உருவாக்கிய பரம்பரையை ‘நாகபல்லவ சோழர்கள்’ என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார் (கள்ளர் சரித்திரம்) அழைப்பார்.

நாகர்கள் பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று புராணங்கள் கூறும். ஆரிய வர்த்தத்திலிருந்து தொலைவில் இருந்த எந்தப் பகுதியையும் நாகநாடு என்கின்றன புராணங்கள். ஆக ஆரியர்கள் வாழ்ந்த பகுதிக்கு வெளியே இருந்த மக்களை ஆரியர்கள் நாகர்கள் என்றே அழைத்துள்ளனர். ஏனெனில் ஜாவாத் தீவில் வாழ்ந்த மக்களையும் நாகர்கள் எனவும், அவர்களது தலைநகரத்தை நாகபுரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளதை மணிமேகலைக் கூறுகின்றது. ஆகையால் ஆரியர் ஆட்சிக்கு உட்படாத தெற்கு தென் கிழக்காசியா பழங்குடிகளை நாகர்கள் என்றழைக்கப்பட்டு இருக்க வேண்டும் என கருத இடமுண்டு.  எது எதுவானாலும் சோழர்கள் வெளியில் இருந்து வந்து காவிரிக்கரையின் பூர்வ குடிகளை விரட்டி நாடு பிடித்துள்ள தகவல்களை அறிய இயலுகின்றது.

முற்காலச் சோழர்கள் தஞ்சையின் மண்ணின் மைந்தர்களான குறும்பர்களை விரட்டி விட்டு காடுகளை அழித்து கழனியாக்கி ஆட்சி செய்தவர்கள். களப்பிரர்கள் வருகையோடு காணாமல் போனவர்கள் திடுதிடுப்பென எட்டாம் நூற்றாண்டில் வந்திறங்கிய பிற்காலச் சோழர்கள் தமிழகத்தை ஆள போட்டிப் போட்டுக் கொண்டிருந்த பல்லவரையும், பாண்டியரையும் ஒதுக்கியதோடு அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கு போரிடுவதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தார்கள்.

தெலுங்கு சோழர்கள்

தமிழகத்தைப் போன்று ஆந்திராவின் பகுதிகளையும் சோழ மனவாடுக்கள் தெலுங்கு சோழர்கள் என்றழைக்கப்பட்டு தொடர்ந்து ஆட்சி செய்து வந்துள்ளதோடு, கிழக்கு சாளுக்கிய அரசக் குலத்தோடு ஒன்றிணைந்து கிழக்கு சாளுக்கிய அரசையும் ஆண்டுள்ளார்கள். தெலுங்கு சோழர்கள் தொண்டைமண்டலத்துக்கும் வேங்கை நாட்டுக்கும் இடைப்பட்ட ஆந்திராவின் ராயல்சீமை பகுதிகளில் கிபி 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் கிழக்கு சாளுக்கியர்கள், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள் ஆகியோருக்கும் கீழும் இருந்து வந்துள்ளனர். இந்த தெலுங்குச் சோழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வேலநாட்டுச் சோழர்கள், ரேணாட்டுச் சோழர்கள், பொத்தாப்பிச் சோழர்கள், கோணிதேணாச் சோழர்கள், நன்னூர் சோழர்கள், நெல்லூர் சோழர்கள்.

இவர்கள் பல சமயங்களில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியும் ஆட்சி செய்துள்ளனர். பல்லவர்கள் காஞ்சியை முழுமையாக கைப்பற்ற முன்னர் அங்கு தெலுங்குச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர். தெலுங்குச் சோழர்களில் வேலநாட்டுச் சோழர்களைத் தவிர மற்ற அனைவரும் தம்மை கரிகாலச் சோழனின் வழி வந்தோர் எனக் கூறுகின்றனர். 

இடைப்பட்ட காலத்தில் இந்த சோழர்கள் எங்கே இருந்தார்கள். தமிழகத்தையோ கிபி 300 - 600 வரை களப்பிரர்கள் ஆண்டார்கள். கிபி 600 - கிபி 850 வரை பல்லவர்களும், பாண்டியர்களும் கூறு போட்டார்கள். தஞ்சை தரணியிலோ களப்பிரர் வழி வந்த முத்தரையர்கள் பாண்டியருக்கு கப்பம் காட்டி ஆண்டார்கள். இந்த நிலையில் வெறும் பழையாறையில் போய் ஒழிந்து கொண்டு வாழ்ந்தார்கள் என்ற கதை எந்தளவுக்கு நம்பக் தகுந்ததோ? பொன்னியின் செல்வன் படைக்க கல்கிக்கும், சோழர்கள் புகழ் பாட சிலருக்கும் இது ஏற்புடையதாக இருக்கலாம். 

ராயல்சீமையில் ஆட்சி செய்த சோழர்கள் ஏன் தமிழை வளர்க்கவில்லை. இவர்கள் தான் தங்கத் தமிழ் மன்னர்கள் ஆச்சே, ஆனால் ரேணாட்டுச் சோழர்கள் என அழைக்கப்பட்ட இவர்கள் கிபி ஐந்தாம் நூற்றாண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்து தெலுங்கு மொழியை வளர்த்துள்ளார்கள். இந்த ரேணாட்டுச் சோழர்கள் பிற்காலத்தில் ஐந்து சோழ வம்சத்தை ஆந்திராவில் நிறுவியனார்கள், அவை முறைய பிற்கால ரேணாட்டுச் சோழர்கள், பொத்தாப்பிச் சோழர்கள், கோணிதேனா சோழர்கள், நன்னூர் சோழர்கள், நெல்லூர் சோழர்கள். இவர்கள் யாவரும் கரிகாலச் சோழன் வம்சம் எனவும் அறிவித்துக் கொண்டார்கள்.

பிற்காலச் சோழர்கள் 

இப்போது தான் தமிழகத்தில் சீன் மாறுகின்றது. கிபி எட்டாம் நூற்றாண்டில் பல்லவர் தூண்டுதலின் பேரில் விஜயாலயச் சோழன் முத்தரையரை வென்று தஞ்சையை கைப்பற்றி பிற்காலச் சோழ ஆட்சியை நிறுவினான். இவர்கள் வழி வந்தோர் தான் ராஜ ராஜ சோழன், ராஜந்திரே சோழன் முதலியோர். முத்தரையரையும், அவர்களுக்கு பெரும் உதவி செய்த பாண்டியரையும், பின்னர் பல்லவரையும் திடு திடுப்பென தோற்கடிக்க விஜயாலயனுக்கு எங்கிருந்து வந்தன இத்தனை படை பலமும், ஆயுத பலமும், செல்வமும். பழையாறைக்குள் முடங்கிக் கிடந்தவர்களுக்கு வானில் இருந்தா பலம் வந்தது. அல்லது தெலுங்கு தேசத்தில் போய் சாளுக்கியர்களோடு கலப்புற்ற சோழர்களே மீண்டும் தஞ்சைக்கு வந்து ஆட்சியை பிடித்தார்களா? 

ராஜ ராஜ சோழன் தனது மகள் குந்தவையை கிழக்கு சாளுக்கிய மன்னன் விமலாதித்தியனுக்கு மணந்த படியால் தான் சோழரும் சாளுக்கியரும் ஐக்கியப்பட்டனர் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. 

ஆனால் இந்த சம்பவங்கள் நடைபெற முன்னரே, ராஜ ராஜ சோழன் வேங்கி நாட்டுக்குள் படை எடுத்தான். எதற்காக படை எடுத்தான். கிழக்கு சாளுக்கிய அரியணையை யார் ஏற்பது என்ற சிக்கல் வந்தது சக்தி வர்மனுக்கும் ஜடா சோழ பீமனுக்கும். இந்த நிலையில் ஜடா சோழ பீமன் அரசை கைப்பற்றியதும், சக்தி வர்மன் ஓடோடி போய் ராஜ ராஜனிடம் முறையிட, ராஜ ராஜனும் ஜடா சோழ பீமனை தோற்கடித்து, கொன்று சக்தி வர்மனை அரியணையில் ஏற்றினன். இந்த சக்தி வர்மனின் மகன் தான் விமலாதித்தியன், இவனுக்கு தான் ராஜ ராஜ சோழன் தமது மகள் குந்தவையை மணம் முடித்துக் கொடுத்தான். 

ஆனால் பாருங்கள், ஏற்கனவே வேங்கி நாட்டை ஆண்ட ஜடா சோழ பீமனும் சோழ அடைமொழியை கொண்டிருக்கின்றார்ன் அல்லவா? அப்போது கிழக்கு சாளுக்கிய அரசர்களோடு சோழர்கள் நெடுங்காலமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும் தானே. எத்தனையோ மன்னர்கள் இருந்தும், ஏன் சக்தி வர்மன் ராஜ ராஜனிடம் அடைக்கலமானான்.

பாருங்கள் கிழக்கு சாளுக்கிய மன்னனின் பெயர் விஜயாதித்திய, அதே காலத்தில் வந்திறங்கிய சோழ மன்னனின் பெயர் விஜயாலயா, அவனுக்கு பின் வந்தோரின் பெயர் எல்லாம் முழுமையான சமற்கிருத பெயர்கள். தெலுங்கு சோழர்கள், தமிழ் சோழர்களிடம் காணப்பட்ட கண்டா, ஆதித்யா ஆகிய பெயர்கள் தெலுங்கு பல்லவர்களிடம், கிழக்கு சாளுக்கியர்களிடம் காணப்படுகின்றது. 

சோழர்கள் தமிழர்களா? 

யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் வாழ்ந்தார்கள், ஆட்சி செய்துள்ளார்கள் ஆக தமிழர்கள் தான் என்று துணிய வேண்டும். சோழர்கள் தமிழர்களாகவும், தெலுங்கர்களாகவும் இருந்துள்ளார்கள். ஏனெனில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆந்திரத்தையும் ஒரு சோழ வம்சம் ஆண்டுள்ளதே. குலோதுங்கனுக்கு பின் சோழ சாளுக்கிய வம்சமாக அனைத்தும் மாறியும் உள்ளதே. 

ஆனால் இன்று போலி தமிழ் தேசியம் பேசுவோரின் இலக்கணப் படி இவர்கள் தமிழர்களாக இருக்க இயலுமா? ஏனெனில் இன்று போலி தமிழ் தேசியம் பேசுவோருக்கு தமிழகத்தில் வாழ்ந்தாலும், தமிழ் மொழி பேசினாலும், தமிழகத்தை ஆண்டாலும் கூட தமிழர்கள் ஆகிவிட முடியாதே. அவர்களுக்கு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள், அவங்களோடு அப்பன், ஆத்தாள் என அனைவரும் சுதிசுத்தமான தமிழர்களாக இருக்க வேண்டுமே. இங்கு தான் இடிக்கின்றது. அப்படிப் பார்த்தால் நடுக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட பலரும் சுத்தமான தமிழர்களாக இருந்திருக்கவில்லை என்பதை வரலாற்றின் ஊடாக அறியலாம். உலகில் உள்ள அனைத்து மன்னர் குடும்பங்களைப் போல இவர்களும் பிற மொழி பேசும் மன்னர் குடும்பங்களோடு சம்பந்தம் செய்துள்ளனர். ஆக ஒரு வகையில் இவர்கள் யாவரும் கலப்புற்றவர்கள். இனத் தூய்மை பேசும் நவீன இட்லர்களுக்கு இது பொறுக்காதே. வரலாற்றின் போது முடியரசுகள் தம் மொழியை மாற்றுவதும், இடங்களை மாற்றுவதும் எப்போதும் உண்டு. தமிழ் அரசர்களான வேணாட்டு அரசர்கள் பிற்காலத்தில் மலையாளம் பேசும் திருவிதாங்கூர் அரசுகளாக மாறவில்லையா? 

இங்கு ஒப்பு நோக்கினால் சோழர்கள் தமிழர்களா? தெலுங்கர்களா? என்ற கேள்வி எழுப்புவதை விட அக்கால வரலாற்று தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மன்னர்களுக்கு மொழி, இனம், மக்கள் என்பதை எல்லாம் விட அவர்களின் அதிகாரம், அரசு, புகழ் என்பது தான் முக்கியமாக இருந்துள்ளன. ? 

தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் காலப் போக்கில் வெளியில் இருந்து வந்தாலும் தமிழர்கள் தான் என்பது என் கருத்து. ஆனால் சிலர் தமிழ்நாட்டில் எத்தனை ஆண்டு காலம் தமிழர்களாக வாழ்ந்தாலும் தமிழர்களாக முடியாது என்பது  சிலர் கருத்து. இவர்களை எண்ணி நகைப்பதா, அழுவதா? என்னவோ போங்கப்பா.

தமிழ்நாட்டில் எத்தனை ஆண்டு வாழ்ந்தாலும், ஆண்டாலும் வெளியில் இருந்து வந்தவர்கள் தமிழராக முடியாது என்றால்? ராஜ ராஜ சோழன் உட்பட சோழர்கள் கூட தமிழராக முடியாதே... என்பது எனது கேள்வி 

தமிழ் மொழி அழியுமா தழைக்குமா - நம் முன்னே உள்ள சவால்கள்.


ஒரு மொழி அதன் தாயகத்தில் வாழ வழியற்றுப் போனால் வேறு எங்கும் நிலைத்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம். குறிப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் அனைத்து மொழிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பிரதேசம் தாயகப் பகுதியாக இருக்கின்றது. அந்த மொழி தோன்றி, பரிணமித்து வளர்ச்சி பெற்ற இடமாக அது இருக்கின்றது. இது இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது. 

அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்து மக்கள் புலம்பெயரும் போது தமது தாய்மொழியையும் எடுத்துச் செல்கின்றனர். சில சந்தர்பங்களில் தாம் புலம்பெயரும் புதிய தேசத்தின் அரசியல், பொருளாதாரம் முதலிய காரணங்கள் ஏதுவாய் இருக்குமானால், அந்த மொழி புதிய தேசத்தில் தழைத்தோங்கும் வாய்ப்புண்டு. அதே சமயம் மிகுந்த நெருக்கடிகளைச் சந்திக்கும் என்றால் அம் மொழி வழங்கொழிந்து போய்விடும். 

புதிய தேசத்தில் மட்டுமின்றி பாரம்பரியமாக ஒரு மொழி பேசப்பட்டு வரும் தாயக பகுதிகளில் கூட அரசியல், பொருளாதார சமூக வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒரு மொழி தக்க வைக்கப்படவும் இயலும், நிர்மூலமாக்கப்படவும் இயலும். அல்லது தனது தனித்துவத்தை இழந்து புதிய மொழியாக மாற்றம் காணவோ, வேறு மொழிகளோடு கரைந்து காணாமல் போகவோ முடியும். 

ஆக ஒரு மொழி நிலைத்திருக்க அதனை பேசக் கூடிய மக்கள் மிக முக்கியம். அந்த மக்கள் குழுமி வாழ ஏதுவான தாய்நிலம் மிக மிக அவசியம். அத்தோடு மட்டுமின்றி, அந்த மொழி பேசும் மக்களின் அரசியல் பொருளாதார ஆதிக்கமும், சமூக வளர்ச்சியும் இன்றியமையாதது. அதாவது ஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டும் எனில், அந்த மொழி அதன் தாய்நிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும்.

நெகிழ்வுத் தன்மை

வரலாற்றை வாசிப்போமானால் பல மொழிகள் காலப் போக்கில் சிதைந்தும், உருமாறியும், அழிந்தும் போயுள்ளன. சில மொழிகள் இன்றளவும் நிலைத்து வருகின்றன. பண்டைய பண்பாடுகளை உருவாக்கிய எகிப்து, சுமேரிய, ரோம மொழிகள் அனைத்தும் அந்தந்த தாய்நிலத்தின் அரசியல் நிர்மூலமாக்கப்பட்ட பின் அழிந்து போய்விட்டன. பேரரசின் மொழிகளாக, மக்களின் மொழிகளாக பண்டைய இந்தியாவின் பிராகிருத மொழி இன்று வழக்கில் கிடையாது. அது சிதைந்து மராத்தியம், சிங்களம், இந்தி, மயிதிலி, வங்காளம் என உருமாறி புதிய மொழிகள் பல பிறந்தன. 

மிகப் பழமையான வளர்ச்சி வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழி கூட இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார தாக்கத்தினால் தமிழகத்தின் மேற்கு கரைப் பக்கம் மலையாளமாக உருமாறி தனித்த மொழியாக மாற்றம் அடைந்தது. ஏனைய பகுதியில் மட்டும் தமிழாக இன்றளவும் நிலைத்து நிற்கின்றது. அது போக தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேறிய போது தமிழ் அந்தந்த நாடுகளில் நிலைப்பெற்றது. ஆனால் தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், றியூனியன், பிஜி, கயானா போன்ற நாடுகளில் அரசியல் சமூக பொருளாதார ஆதரவு ஏதுமில்லாது போனதால் தமிழ் மொழி அழிவுற்றது. அங்குள்ள தமிழர்கள் காலப் போக்கில் அந்தந்த தேசத்து மொழிகளை பயின்று கொண்டனர். 

கரை கடந்த தமிழ் 

இலங்கையில் 13-ம் நூற்றாண்டு முதலே தமிழ் சிற்றரசர்களின் ஆட்சி நிலவியதால் தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட்டது. அது போக அங்கு இன்றளவும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாகவும் இருந்து வருவதால், சிங்கள பகுதிகளில் கூட தமிழ் மொழி வாழும் மொழியாக இருந்து வருகின்றது. இதே போன்றே மலேசியா, பர்மா, சிங்கப்பூரிலும் ஆரம்பம் முதலே தமிழ் பள்ளிகள் நிறுவப்பட்டதோடு அரசு துணையோடு தமிழ் மொழி வாழும் மொழியாக நிலை நிறுத்தப்பட்டது. 

ஆனால் 1960-களின் பின் பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டதோடு, தமிழ் மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பும் அருகி போனது. அதனால் இன்று பர்மாவில் வாழும் இரண்டு லட்சம் தமிழர்களில் பலருக்கும் சரியாக தமிழ் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ தெரியவில்லை. 

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகவும், பள்ளிகளில் கற்கை மொழியாகவும் இருந்து வருகின்றது. அரசின் உதவிகள் பல தமிழ் மொழி வளர்ச்சிக்கு வழங்கப்படுகின்றது. இருந்த போதும் அங்குள்ள கணிசமான தமிழ் பெற்றோர்கள் தமிழை தம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க தவறியதன் மூலமாகவும், தமிழை விட ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தமையாலும் தமிழர்களில் 40 % பேருக்கு தமிழ் எழுதவோ, வாசிக்கவோ தெரியவில்லை. அவர்களது வீடுகளில் ஆங்கிலமே பேச்சு மொழியாக இருக்கின்றது. 

உலகில் எங்கும் தமிழ் மொழி வாழ்ந்தாலும் அழிந்தாலும் தாய் தமிழகத்தில் தமிழ் மொழி போற்றி பாதுக்காக்கப்படவில்லை என்றால் காலப் போக்கில் உலக அரங்கில் இருந்து தமிழ் மொழி இறந்த மொழியாக மாறும் பேரவலம் ஏற்படலாம். தமிழகத்தின் பண்டையா காலம் தொட்டே அரசியல் சமூக-பொருளாதார மொழியாகவும் தமிழ் இருந்து வந்திருக்கின்றது. இந்தியாவில் பிராகிருதம், சமற்கிருதம் போன்ற மொழிகள் ஆளுமை செலுத்திய காலங்களில் கூட தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. இலக்கண, இலக்கிய படைப்புக்கள் தொட்டு கல்வெட்டுக்கள், கலைகள், சமயங்கள், வர்த்தகங்கள் என அனைத்தும் தமிழிலேயே இருந்து வந்தன.

வந்தோரும் வளர்த்த மொழி

கிமு மூன்றாம் நூற்றாண்டு தொட்டு வடக்கில் இருந்து வந்த சமண, பௌத்த, இந்து சனாதன மதங்கள் கூட முறையே தத்தமது மதங்களை தமிழிலேயே பரப்பினார்கள். சமணர்கள் ஒரு படி மேல் போய் பலவிதமான இலக்கியங்களையும், இலக்கணங்களையும், காப்பியங்களையும் தமிழிலேயே உருவாக்கியதோடு. ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளிகளை நிறுவி சமண மதத்தோடு தமிழ் மொழியையும் கற்றுக் கொடுத்தார்கள். தமிழ் இன்றளவும் வாழும் மொழியாக இருப்பதற்கு அவர்களின் பங்கு அதிகம் எனலாம். 

கிபி ஏழாம் நூற்றாண்டளவில் எழுந்த பார்ப்பனிய மதம் சார்ந்த பக்தி எழுச்சி காலங்களில் கூட தமிழ் மொழிகளிலேயே இந்து மதத்தை பரப்பியும் உள்ளார்கள். பல சமற்கிருத நூல்கள் தமிழகத்தில் எழுதப்பட்டு ஆளுமை செலுத்திய போதும் தமிழ் கல்வி தடை பெறவில்லை, தமிழ் மொழி வாழும் மொழியாகவே இருந்து வந்துள்ளது. 

ஏழாம் நூற்றாண்டளவில் வேறு மொழியை தாய் மொழியாக கொண்டு வடக்கில் இருந்து வந்த பல்லவர்கள் கூட அவர்களுடைய சமற்கிருத மொழியை வளர்த்த அதே சமயம் தமிழ் மொழிக்கான இடத்தை அபகரிக்கவில்லை. இந்த நிலையே பிற்கால சோழர்கள், விஜயநகர பேரரசு, நாயக்க மன்னர்கள் என பிற மொழி ஆதிக்கம் செலுத்தியோர் அரசியலை கைக்குள் வைத்திருந்தும் மக்களின் மொழியான தமிழை அழிக்கவில்லை. மாறாக தமிழ் வளர்ச்சி கண்டே வந்தன.

ஐரோப்பிய வருகையின் போதும், கிறித்தவ, இஸ்லாமிய மதமாற்றத்தின் போதும் கூட தமிழ் மொழி வளர்ச்சி கண்டது. இஸ்லாமிய சமயத்தை தழுவிய தமிழ் குடிகளான முக்குவர், மீனவர், மரக்கலத்தார்கள் கூட தமது தாய்மொழியை விட்டுக் கொடுக்கவில்லை. இதே போல பல ஐரோப்பிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து தமிழ் கற்று மதமாற்றப் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியும் உள்ளனர். குறிப்பாக வீரமாமுனிவர், ஜியு.போப், கால்டுவெல் என தமிழ் மொழியின் எழுத்துக்களை சீரமைத்தும், இலக்கியங்களை மொழி பெயர்த்தும், அச்சில் ஏற்றியும் அரும்பணியாற்றியுள்ளனர். 

தமிழகத்தில் குடியேறிய யூதர்கள் கூட ஆரம்பக் காலங்களில் தமிழ் மொழியைக் கற்று வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அஞ்சுவண்ணத்தார் என்றும் அழைக்கப்பட்டனர். 

மேற்குத் தமிழகத்தில் சிதைந்த தமிழ்

கேரளக் கரையில் முதல் வந்திறங்கிய கத்தோலிக்க பாதிரியார்கள் மக்களின் மொழியான தமிழின் ஒரு வழக்கான மலபார் தமிழ் மொழியிலேயே புத்தகங்களை வெளியிட்டனர். 16-ம் நூற்றாண்டளவில் கொல்லம் நகருக்கு அருகே இருக்கும் அம்பலக்காடு என்ற ஊரில் வைத்து தான் முதன்முறையாக தமிழ் மொழியில் தம்பிரான் வணக்கம் என்ற நூலை அச்சிட்டார்கள். ஆக, அந்தக் காலக் கட்டத்தில் கேரளத்தில் தமிழ் மொழியே வழக்கில் இருந்துள்ளது என்பது தெரிய வருகின்றது.

13-ம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் படை எடுப்பினால் கொங்கணக் கரையில் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கை ஓங்கிய நிலையில், அங்கிருந்து தப்பித்து வந்த பிரமாணர்கள் துளுநாட்டுக்குள் வந்து குடியேறினார்கள். துளுநாட்டுக்குள் பிரவேசித்த பிரமாணர்கள் துளு மொழியையும், துளு எழுத்துக்களையும் கற்றுக் கொண்டனர்.

அங்கிருந்து மெல்ல நகர்ந்து நகர்ந்து அவர்கள் சாமூத்திரி மன்னர்கள் ஆட்சி செய்த வட கேரள சமஸ்தானங்களுக்கும் வந்து குடியேறினார்கள். அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த தமிழ் பேசும் நாயர் சமூகத்தோடு சம்பந்தம் முறையை கைக்கொண்ட இவர்கள், மெல்ல மெல்ல தமிழும் சமற்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையை பிரபலப்படுத்தினார்கள். இதனால் நம்பூதிரிகளின் அரசியல் செல்வாக்கால் தமிழ் மொழி வலிமை இழந்து சமற்கிருத மயமாக்கப்படத் தொடங்கியது. அதன் விளைவாக மலையாளக் கரை வாழ் தமிழர்கள் தமது தாய்மொழியை இழக்கத் தொடங்கினார்கள்.

அதுவும் போக திப்பு சுல்தானின் படை எடுப்பினால் மணிப்பிரவாளத்தை பயன்படுத்திய பல நம்பூதிரிகளும், நாயர்களும் தென் கேரளத்துக்குள் தஞ்சம் அடைந்தனர். இவர்களின் வருகையோடு தமிழ் மொழி சீரும் சிறப்புமாக இருந்த தென் கேரளமும் மொழி மாற்றமடையத் தொடங்கின.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஜெர்மானிய பாதிரிமார்கள் பலரும் மலையாண்மை தமிழ் என்ற மக்களின் மொழியை கைவிட்டு, தமது பிரசங்கங்களிலும், பள்ளிகளிலும், அச்சிலும் துளு எழுத்தை மையப்படுத்தி நம்பூதிரிமார்கள் பேசிய மணிபிரவாளத்தை மலையாளம் என்ற பெயரில் பரப்பினார்கள். இந்தக் கொடுஞ்செயலில் முன்னின்று உழைத்தவர்கள் பெஞ்சமின் பெய்லி, ஹெர்மன் குண்டர்ட் போன்ற புரடஸ்டண்டு மதப் பாதிரியார்களே.

18-ம் நூற்றாண்டு வரை பெரும்பாலான கேரள முஸ்லிம்கள், பழங்குடிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் தமிழின் வழக்கான மலையாளத் தமிழிலேயே பேசி வந்துள்ளனர். ஆனால் அதன் பின் பள்ளிகள், பத்திரிக்கைகள் என அனைத்திலும் மலையாளம் என்ற பெயரில் துளு எழுத்தைக் கொண்ட மணிப்பிரவாளம் நடைமுறைப்படுத்தப் பட்ட பின் தமிழ் முற்றாக மறைந்தே போனது. 

தமிழின் மறுமலர்ச்சியும் பெரும் வீழ்ச்சியும்

ஏன் இவற்றை எல்லாம் சொல்கின்றேன் எனில், ஒரு மொழி நிலைத்திருக்க மக்களின் பயன்பாடு, நிலப்பரப்பு, அரசியல் அதிகாரம், சமூக பொருளாதாரப் பங்கு என்பவை மிக மிக அவசியம். இவற்றில் ஒன்று குறைந்தாலும் மொழி அழிந்து போய்விடக் கூடும். குறிப்பாக தமிழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழின் வளர்ச்சி குன்றி வருகின்றது. ஆரம்ப கால திராவிட மற்றும் தமிழ் அரசியல் இயக்கங்கள் தமிழ் மொழியின் மறுமலர்ச்சியில் பெரும் பங்காற்றி வந்தன. இந்தி மொழி திணிக்கப்பட்ட போது இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நிகழ்த்தியதோடு, தமிழ் மொழி மீதான மக்களின் ஆர்வத்தை தூண்டிவிடவும் செய்தன.ஆயிரம் ஆண்டுகால சமற்கிருத கலப்புக்களை நீக்கி தனித்துவமான தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தியதோடு, தமிழ் மொழி கல்விக்கும், தமிழ் பயன்பாட்டுக்கும் வழி வகுத்தன. 

ஆனால் 1970-களில் ஏற்பட்ட திராவிட இயக்க பிரிவினைக்கு பின் திராவிட அரசியல் கட்சிகள் தத்தமது பொருளாதார நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படத் தொடங்கின. இதன் விளைவாக 1980-களில் எண்ணற்ற தனியார் பள்ளிகள் முளைத்தன, இவை யாவும் ஆங்கில மொழிக் கல்வியை முக்கியத்துவம் செய்தன. விடுதலைக்கு முன் ஐரோப்பியர்களால் நடத்தப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை காப்பி செய்து இவை தொடங்கப்பட்டதால் நடுத்தர மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தன. அது போக புதிய பொருளாதாரத்தில் ஆங்கிலத்தின் பங்கு உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக வேலை வாய்ப்புக்கு உகந்த மொழியாக ஆங்கிலம் உயர்த்தப்பட்டது. 


1990-களில் ஏற்பட்ட ஊடக வளர்ச்சிக் காலங்களில் பல புதிய தொலைக்காட்சி சேனல்கள் தமிழ்நாட்டில் உருவாகின. இவற்றில் சன் டிவி போன்ற சேனல்கள் திராவிட கட்சிகளை நடத்துவோராலேயே உருவாக்கப்பட்டன. இந்த ஊடகங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்காற்றாமல் மொழிச் சிதைவுக்கு வழிகோலின. வியாபர மயமாக்கப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கிய இந்த தொலைக்காட்சி சேனல்கள் அதிகளவு ஆங்கிலக் கலப்புடைய மொழி நடையை பயன்படுத்த தொடங்கின. அதே காலக் கட்டத்தில் பத்திரிக்கைகள், செய்தி தாள்கள் என்பவையும் தொலைக்காட்சி போன்ற புதிய ஊடகத்தினால் ஏற்பட்ட போட்டி நிலையை சரிகட்ட தாமும் தம் பங்குக்கு ஆங்கிலம் கலந்த, கொச்சைத் தமிழ் நடைகளில் எழுதத் தொடங்கினார்கள். இவ்வாறு தனியார் பள்ளிகள், தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிக்கைகள், சினிமாக்கள் என்பவை ஒரு தலைமுறையினரை கலப்புத் தமிழ் தலைமுறையினராக உருவாக்கியது. இந்த சக்தி வாய்ந்த ஊடகங்கள் தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் பரவி பாமரர்களின் நாவில் கூட காலம் காலமாக பேசி வந்த தமிழை மறக்கடித்து கலப்பு மொழியை பரப்பின. 

2000-களில் ஏற்பட்ட புதிய பண்பலை வானொலி நிலையங்களின் வருகையும், இணையதள ஊடகங்களின் வருகையும் கலப்புத் தமிழ் முறையை மேலும் துரிதப்படுத்தின. ஆக இன்று அடுத்த தலைமுறையையும் கலப்பு தமிழ் நோக்கி நகர்த்தியது. அதுவும் போக பன்னாட்டு பொருளாதார சூழலும், தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகையும் ஆங்கிலம் ஒன்றே பொருளாதார வளர்ச்சிக்கான மொழியாக மாற்றியது. இதற்கு துணை போகும் வகையில் தமிழகத்தை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தொடர்ந்து தமிழ் வழிக் கல்வியை புறக்கணித்ததோடு, அதிகளவிலான தனியார் கல்வி நிறுவனங்கள் வளரவும் துணை நின்றன. இதனால் குறைந்த பொருளாதாரம் கொண்ட மக்களே தரமற்ற தமிழ் வழிக் கல்வியை பயில வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுவும் ஒருக் கட்டத்தில் தமிழ் மொழிக் கல்வி என்றாலே தரமற்றவை, பொருளாதார லாபம் இல்லாதவை என்ற தோற்றத்தை சமூகத்தில் ஏற்பட வழி வகுத்தது. 

தமிழ் வழிக் கல்வி மூடப்பட்டக் கதவு

இந்த நிலையில் தமிழ் மொழி பள்ளிகளையும் மூடிவிட்டு ஆங்கில வழிக்கு மாற்றத் தொடங்கியுள்ளது தமிழக அரசு. தமிழ் வெறும் ஒரு பாடமாக மட்டுமே இன்று பெரும்பாலான பள்ளிகளில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் கட்டாய பாடம் இல்லை என்பதால், இன்று தமிழை கற்காமலேயே தமிழகத்தில் பிறந்து வளர்ந்து வாழ முடியும் என்ற துர்பாக்கிய நிலையும் உள்ளது. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ் (First Language Optional) ஆகத்தான் இருக்கிறது. தமிழுக்குப் பதிலாக, இந்தியையோ, சமற்கிருதத்தையோ, பிரஞ்சையோ எடுத்துப் படித்து தமிழ் வாசமே இல்லாமல் Ph.d வரை படித்துவிட முடியும். இது கிட்டத்தட்ட 15-ம் நூற்றாண்டளவில் கேரளத்தில் ஏற்பட்ட தமிழ் மொழிச் சிதைவுக்கு ஒப்பானதாகவே கருத முடிகின்றது.

அரசுப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுடைய பெற்றோர்களில் குறைந்தது 20 பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கில வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜெயலலிதா அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 3500 ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியில் சுமார் 80,000 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 2012-13 கல்வி ஆண்டில் 640 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பல பள்ளிகளில் அனைத்து பெற்றோர்களும் ஆங்கில வழிக் கல்வியையே தேர்வு செய்தனர். அதற்கும் முன்னரே மாகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கி விட்டது.

ஏற்கனவே தமிழ் மொழியின் எழுத்துக்களை அழித்துவிட்டு ரோமன் எழுத்துக்களில் எழுதலாம் என தமிழ் எழுத்தாளரே அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டன. தமிழ் மொழியை பாதுக்காப்பதன் ஊடாக ஓரளவு அரசியல் செய்து வந்த திமு கழகம் போன்ற கட்சியும் தனது சுயநல அரசியலாலும், ஊழல்வாதத்தாலும் வலிமை இழந்து போய்விட்ட நிலையில் அரசியல் மட்டத்தில் தமிழ் மொழிக்கான இடத்தை நிலைநிறுத்தச் செய்யும் குரலும் ஒடுங்கி வருகின்றது. இந்த நிலை தொடருமானால் வரும் தலைமுறைகளில் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும் அபாயம் உள்ளது. 

தமிழகம் இன்று பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது தான். சமூக, பொருளாதாரத்தில் பல சிறப்புக்களை நாம் பெற்றுள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக இலவசக் கல்வி, மதிய உணவுத்திட்டம், பெண்கள் முன்னேற்றம், இட ஒதுக்கீடுகள், பொருளாதார வளர்ச்சி எனப் பல சாதனைகளை நாம் பெற்றுள்ளோம். ஆங்கிலம் மட்டுமல்ல தாய் மொழிக் கல்வியும் மிக அவசியம் ஆகின்றது. அத்தோடு பொருளாதாரச் சந்தையில் நிலைத்து நிற்கவும், வேலை வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறவும் பல மொழிகளைப் பயில வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

இன்றையக் காலக்கட்டத்தில் இணைய தளங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருந்து வருகின்றன. அதே போல பல இளைஞர்கள் தமிழ் மொழி மீது ஆர்வமுடையவர்களாகவும், தமிழ் மொழியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உழைத்துக் கொண்டிருப்பவர்களாவும் உள்ளது சாதகமான ஒரு விடயமாகும். 

வரும்காலம் மிச்சம் வைத்துள்ளவைகள்

தமிழ் மொழிச் சிதைவுக்கு காரணமாக இருக்கும் தமிழ் ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி வழிக்கு கொண்டு வருவது என்பது குறித்தும், தமிழ் மொழிக்கு மிகப் பெரிய சவாலாக உருமாறி வரும் ஆங்கில வழி தனியார் மற்றும் அரசு கல்வி நிலையங்களை எவ்வாறு மக்களின் பொருளாதார நலன் பாதிக்கப்படாமல் எதிர்கொள்ள போகின்றோம் என்பது குறித்தும் தனிக் கவனம் எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அந்த மொழி வழியாக கல்வி கற்பது மட்டுமே உதவுவதில்லை. முதுநிலைப் பட்டப் படிப்பு வரை கூட ஆங்கில வழியில் படித்திருந்தாலும், எளிய ஆங்கில வாக்கியங்களைக் கூட பேச முடியாதவர்கள் பலர் உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் சரளமாக உரையாட, எளிய ஆங்கில வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ள தேவைப்படுவது தரமான ஆங்கில மொழிக்கல்வியே தவிர எல்லாப் பாடங்களையும் புரியாத மொழியில் பயின்று வரும் பேருக்கான ஆங்கில வழிக் கல்வி அல்ல.

தமிழை மெல்ல மெல்ல அழிக்கும் சதித் திட்டத்துடன் ஆங்கிலவழிக் கல்வியை அரசுப்பள்ளிகளில் திணித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயராம் ஜெயலலிதா.

முக்கியமாக தமிழக அரசும், தமிழ் மக்களும் தமிழ் மொழியை பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த மொழியாக மாற்ற முனைய வேண்டும். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் மட்டுமே தமிழ் மொழி தழைத்தோங்க முடியும். தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் அதனை தமிழகத்தின் அரசியல் பொருளாதார சாதக மொழியாக மாற்றவும் மிகப் பெரிய சவாலை எதிர் நோக்கியுள்ளோம். உலகின் தாய் மொழி கல்வியை பயின்று பொருளாதாரத்தில் வலிமை கொண்ட தேசங்களான பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இங்கிலாந்து, நோர்வே என பல நாடுகளிடம் இருந்து நாம் பயில வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. வெறும் தமிழ் பழமையான மொழி, செம்மொழி என வாய் கிழிய பிரச்சாரம் செய்வதை விட தமிழை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது எவ்வாறு  என்பதையும், தமிழக அரசியலில் தமிழுக்கான உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வது எவ்வாறு  என்பதையும், தமிழை பொருளாதார லாபமுடைய மொழியாக மாற்றுவது எவ்வாறு என்பதையும் குறித்து நாம் சிந்தித்து ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

ஆங்கிலவழியில் படித்தால் அறிவாளியாகலாம்; எங்கு போனாலும் வேலை கிடைக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், பற்பல தொழில்கள் செய்யவும், வர்த்தகங்களில் ஈடுபடவும் தமிழே மிகப் பிரதானமானது. இவற்றில் ஆங்கிலம் அவசியம் கூட கிடையாது. வெறும் 6 சதவீதமே உள்ள தொழில்நுட்ப பணிகளுக்காக அனைவரும் ஆங்கிலத்தில் படித்து ஐடித் துறைக்குள் போக வேண்டும் என்ற நினைப்பு விதைக்கப்பட்டுள்ளது.

நான் முழுக்க முழுக்கத் தமிழ்மொழி வழியிலேயே படித்து – அரசுப் பள்ளிகளிலேயே படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அரசாங்க வேலைகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உண்டு. எனவே உற்சாகமாகத் தாய்மொழியில் படிக்க வையுங்கள், ஆங்கிலத்தின்பின் ஓட வேண்டாம் என துணை வேந்தர் முனைவர் ம. திருமலை கூறுகின்றார். கணிதமேதை ராமானுஜம்,  விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்து புகழ் பெற்றவர்கள்தானே.

எட்டு கோடி பேர் வாழும் தமிழகத்தின் நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும் ஒத்த ஜெர்மனில் எவ்வாறு டொய்ச்சு மொழி கல்வி, பொருளாதார, அரசியல் மொழியாக இயங்கி வருகின்றது என்பதை தமிழர்கள் உணர்ந்து அவர்களிடம் இருந்து பாடங்கள் கற்க வேண்டும். ஆனால் தமிழ் மொழியின் அழிவின் மீது ஏறிக் கொண்டு நமது அடையாளங்களை இழப்பது நமது முகத்தை சிதைத்து நமது முகவரியை அழித்துப் போவதற்கு சமமாக இருக்கும் என்பதை மறக்க கூடாது.

வெளி மாநிலங்களிலிருந்து, கர்நாடகாவில் குடியேறியுள்ளவர்கள் கன்னடத்தை கற்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா கூறியுள்ளார். வேறு மாநிலத்தவர் கருநாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் அதிகம் குடியேறி வருகின்றனர். இவர்களில் பெருமளவிலான தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், இந்தியர்களும் அடக்கம். வேலை வாய்ப்பு, தொழில் மற்றும் கல்வி நிமித்தமாகவே பலர் அங்கு குடியேறுகின்றனர். அவர்களில் பலரும் கருநாடகத்தின் நிரந்தரவாசிகளாகவும் ஆகிவிடுகின்றனர். அவர்கள் கருநாடகத்தின் வளங்களை அனுபவிக்கின்றனர், அதனால் கருநாடகத்தின் மொழியான கன்னடத்தையும் கற்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அத்தோடு ஆங்கிலத்தை கற்க எவ்வித தடையில்லை எனவும், அதே சமயம் எந்த காரணத்தாலும் இங்கு செயல்பட்டு வரும் கன்னட வழி பள்ளிக் கூடங்கள் எதுவும் மூடப்படாது. இவ்வாறு சித்தராமய்யா பேசினார்.
ஆனால் தமிழகத்திலும் வேறு மாநிலத்தவர் பலரும் குடியேறி வருகின்ற போதும், தமிழ்நாட்டு அரசு தமிழை அனைவருக்கும் கட்டாயப் பாடமாய் மாற்றவில்லை. தமிழ்நாட்டில் தமிழே அறியாமல் பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்து பணியாற்றும் சூழல் ஏற்படுத்தப்பட்டும் உள்ளது. அத்தோடு பல தமிழ் வழி பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டும், ஆங்கில வழிக் கல்விக்கு மாற்றப்பட்டும் வருகின்றது நிச்சயம் கவலை தரும் ஒரு விடயம். அண்மையில் வெளியான ஓர் அறிக்கையில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், உள்கட்டமைப்பு வளர்ச்சியிலும் சென்னையை பின்னுக்கு தள்ளியுள்ளது பெங்களூர். ஆக நாம் பொருளாதாரம், மொழி ஆகிய இரண்டையும் இழந்து வருகின்றோம. நமது சகோதரர்களான கன்னடர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன.